• May 10 2024

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்! வெளியான அறிவிப்பு samugammedia

Chithra / Apr 4th 2023, 3:02 pm
image

Advertisement

தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விசேட ரயில் சேவைகள் வழக்கமான ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பயணிகள் தமது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும் தடங்கள் இன்றி செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

புத்தாண்டுக்கு முன்னரும் பின்னரும் முக்கிய நகரங்களை உள்ளடக்கிய பேருந்துகளை பயணிகள் செல்வதற்கு வழங்குமாறு அனைத்து வீதி போக்குவரத்து சேவைத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை முனையங்களில் புத்தாண்டு விசேட பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கான விசேட பேருந்து சேவை ஏப்ரல் 07ஆம் திகதி ஆரம்பமாகி 18ஆம் திகதி வரை தொடரும். ஆரம்பத்தில் சுமார் 150 பேருந்துகள் சேவையில் ஈடுபடும்.

மேலும் 250 பேருந்துகள் ஏப்ரல் 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் இயங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேவைகளின் தேவையை கருத்திற்கொண்டு பேருந்துகள் ஒதுக்கப்படும். புத்தாண்டுக்கு முன்னரும் பின்னரும் அதிவேக நெடுஞ்சாலைகளில் கொழும்பிலிருந்து மற்றும் கொழும்பிற்கு பேருந்துகள் சேவைகளை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் வெளியான அறிவிப்பு samugammedia தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த விசேட ரயில் சேவைகள் வழக்கமான ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பயணிகள் தமது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும் தடங்கள் இன்றி செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.புத்தாண்டுக்கு முன்னரும் பின்னரும் முக்கிய நகரங்களை உள்ளடக்கிய பேருந்துகளை பயணிகள் செல்வதற்கு வழங்குமாறு அனைத்து வீதி போக்குவரத்து சேவைத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொழும்பு மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை முனையங்களில் புத்தாண்டு விசேட பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கான விசேட பேருந்து சேவை ஏப்ரல் 07ஆம் திகதி ஆரம்பமாகி 18ஆம் திகதி வரை தொடரும். ஆரம்பத்தில் சுமார் 150 பேருந்துகள் சேவையில் ஈடுபடும்.மேலும் 250 பேருந்துகள் ஏப்ரல் 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் இயங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சேவைகளின் தேவையை கருத்திற்கொண்டு பேருந்துகள் ஒதுக்கப்படும். புத்தாண்டுக்கு முன்னரும் பின்னரும் அதிவேக நெடுஞ்சாலைகளில் கொழும்பிலிருந்து மற்றும் கொழும்பிற்கு பேருந்துகள் சேவைகளை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement