• Apr 01 2025

கிராமிய வைத்தியசாலைகளிலும் விசேட வைத்தியர்களின் சேவை! சுகாதார அமைச்சு நடவடிக்கை

Chithra / Mar 30th 2025, 12:14 pm
image

 


கிராமிய வைத்தியசாலைகளிலும் விசேட வைத்தியர்களின் சேவையை விரிவுபடுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார பிரதியமைச்சர் டொக்டர் ஹங்சக விஜயமுனி தெரிவித்தார்.

தற்போது ஆதார வைத்தியசாலைகள் அல்லது அவற்றுக்கு அடுத்த தரத்திலான வைத்தியசாலைகளில் மாத்திரமே விசேட வைத்தியர்களின் சேவை காணப்படுகிறது. 

இதன் காரணமாக கிராமப்புற மக்களுக்கு விசேட வைத்தியர்களின் சேவையை இலவசமாகப் பெற்றுக் கொள்வதற்கு இயலாமல் போயுள்ளது. 

எனவே முன்னோடி வேலைத்திட்டமாக கண்டி மாவட்டத்தின் 06 வைத்தியசாலைகளில் அடுத்த மாதம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

கிராமிய வைத்தியசாலைகளில் வாரத்திற்கு ஒருநாள் விசேட வைத்தியர்களின் சேவையை பெற்றுக்கொடுக்க இதனூடாக எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்காக வைத்தியர்கள் தாமாகவே விருப்பத்துடன் முன்வந்துள்ளனர். 

கிராமிய வைத்தியசாலைகளில் இருந்து நகர வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைப்பதே இதன் நோக்கமாகும் என்றார்.

கிராமிய வைத்தியசாலைகளிலும் விசேட வைத்தியர்களின் சேவை சுகாதார அமைச்சு நடவடிக்கை  கிராமிய வைத்தியசாலைகளிலும் விசேட வைத்தியர்களின் சேவையை விரிவுபடுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார பிரதியமைச்சர் டொக்டர் ஹங்சக விஜயமுனி தெரிவித்தார்.தற்போது ஆதார வைத்தியசாலைகள் அல்லது அவற்றுக்கு அடுத்த தரத்திலான வைத்தியசாலைகளில் மாத்திரமே விசேட வைத்தியர்களின் சேவை காணப்படுகிறது. இதன் காரணமாக கிராமப்புற மக்களுக்கு விசேட வைத்தியர்களின் சேவையை இலவசமாகப் பெற்றுக் கொள்வதற்கு இயலாமல் போயுள்ளது. எனவே முன்னோடி வேலைத்திட்டமாக கண்டி மாவட்டத்தின் 06 வைத்தியசாலைகளில் அடுத்த மாதம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.கிராமிய வைத்தியசாலைகளில் வாரத்திற்கு ஒருநாள் விசேட வைத்தியர்களின் சேவையை பெற்றுக்கொடுக்க இதனூடாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வைத்தியர்கள் தாமாகவே விருப்பத்துடன் முன்வந்துள்ளனர். கிராமிய வைத்தியசாலைகளில் இருந்து நகர வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைப்பதே இதன் நோக்கமாகும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement