• Jul 03 2025

இலங்கை - பங்களாதேஷ் : ஒருநாள் போட்டி இன்று ஆரம்பம்!

shanuja / Jul 2nd 2025, 10:24 am
image

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. 

 

அதற்கமைய, தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில்,  இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

 

 இரு அணிகளும், நேருக்கு நேர் மோதிக்கொண்ட இறுதி 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளில், இலங்கை அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

 

இதேவேளை, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 35 ஆவது ஓவரிலிருந்து ஒரு பந்துடன் விளையாடும் புதிய விதி, இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் இன்று ஆரம்பமாகும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை - பங்களாதேஷ் : ஒருநாள் போட்டி இன்று ஆரம்பம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.  அதற்கமைய, தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில்,  இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.   இரு அணிகளும், நேருக்கு நேர் மோதிக்கொண்ட இறுதி 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளில், இலங்கை அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.  இதேவேளை, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 35 ஆவது ஓவரிலிருந்து ஒரு பந்துடன் விளையாடும் புதிய விதி, இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் இன்று ஆரம்பமாகும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement