இலங்கை – தாய்லாந்து உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 2024.02.03 ஆம் திகதி கையொப்பமிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், இலங்கை – தாய்லாந்து உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடலை டிசம்பருக்குள் நிறைவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த கலந்துரையாடலின் 06 ஆம் மற்றும் 07 ஆம் சுற்றுக்களில் எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கமைய, இயைபு முறைக் குறியீடு 2022 இன் அடிப்படையில் 15 வருடங்களில் இயைபு முறைக் குறியீட்டில் 80 வீதத்தினை தளர்த்துவதற்கும், 15 – 18 வருடங்கள் வரையான காலப்பகுதியில் இயைபு முறைக் குறியீட்டில் 5 வீதத்தை பகுதியளவில் தளர்த்துவதற்கும், இயைபு முறைக் குறியீட்டின் எஞ்சிய 15 வீதத்தை மறை (-) பட்டியலில் உட்சேர்ப்பதற்கும் இயலுமாகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை வரித் தளர்த்தல் வேலைத்திட்டம் அதிபரால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் : பெப்ரவரியில் கைசாத்துsamugammedia இலங்கை – தாய்லாந்து உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 2024.02.03 ஆம் திகதி கையொப்பமிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.அத்துடன், இலங்கை – தாய்லாந்து உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடலை டிசம்பருக்குள் நிறைவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.குறித்த கலந்துரையாடலின் 06 ஆம் மற்றும் 07 ஆம் சுற்றுக்களில் எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கமைய, இயைபு முறைக் குறியீடு 2022 இன் அடிப்படையில் 15 வருடங்களில் இயைபு முறைக் குறியீட்டில் 80 வீதத்தினை தளர்த்துவதற்கும், 15 – 18 வருடங்கள் வரையான காலப்பகுதியில் இயைபு முறைக் குறியீட்டில் 5 வீதத்தை பகுதியளவில் தளர்த்துவதற்கும், இயைபு முறைக் குறியீட்டின் எஞ்சிய 15 வீதத்தை மறை (-) பட்டியலில் உட்சேர்ப்பதற்கும் இயலுமாகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை வரித் தளர்த்தல் வேலைத்திட்டம் அதிபரால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.