• May 19 2024

உலகில் அதிகம் கொள்ளையடிக்கும் 10 நாடுகளில் இலங்கை - வெளியான அதிர்ச்சித் தகவல்

Chithra / Dec 13th 2022, 9:22 am
image

Advertisement

உலகில் அதிகம் கொள்ளையடிக்கும் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தெளிவான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய அரசாங்கம் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


நாட்டைக் கட்டியெழுப்ப இளைஞர்களின் தலைமை தேவை. போராட்டத்தின் செய்தியை என்றும் மறக்க மாட்டோம். 

இந்த இளைஞர் போராட்டம் நமது நாட்டில் மிகவும் முக்கியமான மற்றும் பெறுமதியான முன்னேற்றமாகும்.ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

இந்தப் போராட்டத்தை அப்படி இப்படியெல்லாம் நினைக்க வேண்டாம். ஒட்டுமொத்த நாட்டையே புரட்டிப் போட்ட இந்த சம்பவத்தை இப்போது மறக்க முயல்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகில் அதிகம் கொள்ளையடிக்கும் 10 நாடுகளில் இலங்கை - வெளியான அதிர்ச்சித் தகவல் உலகில் அதிகம் கொள்ளையடிக்கும் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தெளிவான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய அரசாங்கம் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.நாட்டைக் கட்டியெழுப்ப இளைஞர்களின் தலைமை தேவை. போராட்டத்தின் செய்தியை என்றும் மறக்க மாட்டோம். இந்த இளைஞர் போராட்டம் நமது நாட்டில் மிகவும் முக்கியமான மற்றும் பெறுமதியான முன்னேற்றமாகும்.ஒரு வரலாற்று நிகழ்வாகும்.இந்தப் போராட்டத்தை அப்படி இப்படியெல்லாம் நினைக்க வேண்டாம். ஒட்டுமொத்த நாட்டையே புரட்டிப் போட்ட இந்த சம்பவத்தை இப்போது மறக்க முயல்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement