நாட்டில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள் கப்பல் ஒன்று, எரிபொருட்களை இறக்காமலேயே திரும்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருளை இறக்குமதி செய்த குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான 70 எரிபொருள் நிலையங்களுக்கும் அரசாங்கம் தலையீடு செய்து எரிபொருள் விநியோகம் செய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படாவிட்டால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எரிபொருள் விநியோக சங்கத்தின் செயலாளர் கபில நாபுடுன்ன தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவதாக உறுதியளித்த போதிலும், 70 நிறுவனங்கள் மட்டுமே வழங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழங்குவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கப்பல் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நல்ல வருமானம் ஈட்டுபவை என கபில தெரிவித்துள்ளார்.
உரிய முறையில் ஒப்பந்தம் செய்து கொள்ளாத நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாம் என தமது சங்கம், விநியோகஸ்தர்களை கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு எக்காரணத்தைக் கொண்டும் இடம்பெறாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா நேற்று தெரிவித்துள்ளார்.
அதன்படி நாட்டில் போதிய எரிபொருள் காணப்படுவதாகவும், நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கத்தின் நிறுவனமாக அந்தப் பொறுப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்றுக்கொள்வதாகவும் தலைவர் ராஜகருணா சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் வந்தது எச்சரிக்கை நாட்டில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள் கப்பல் ஒன்று, எரிபொருட்களை இறக்காமலேயே திரும்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எரிபொருளை இறக்குமதி செய்த குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான 70 எரிபொருள் நிலையங்களுக்கும் அரசாங்கம் தலையீடு செய்து எரிபொருள் விநியோகம் செய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது.இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படாவிட்டால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எரிபொருள் விநியோக சங்கத்தின் செயலாளர் கபில நாபுடுன்ன தெரிவித்துள்ளார்.கடந்த அரசாங்கம் அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவதாக உறுதியளித்த போதிலும், 70 நிறுவனங்கள் மட்டுமே வழங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழங்குவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கப்பல் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நல்ல வருமானம் ஈட்டுபவை என கபில தெரிவித்துள்ளார்.உரிய முறையில் ஒப்பந்தம் செய்து கொள்ளாத நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாம் என தமது சங்கம், விநியோகஸ்தர்களை கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு எக்காரணத்தைக் கொண்டும் இடம்பெறாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா நேற்று தெரிவித்துள்ளார்.அதன்படி நாட்டில் போதிய எரிபொருள் காணப்படுவதாகவும், நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கத்தின் நிறுவனமாக அந்தப் பொறுப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்றுக்கொள்வதாகவும் தலைவர் ராஜகருணா சுட்டிக்காட்டினார்.