நாளாந்த டிஜிட்டல் கொடுப்பனவுகளின் அளவை சுமார் 30 வீதம் வரை அதிகரிக்கும் திட்டங்களை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி இந்த முயற்சியை ஊக்குவிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் விழிப்புணர்வு திட்டங்கள் நடத்தப்படும் என்று இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் கே.வி.கே. அல்விஸ் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் கொடுப்பனவுகளின் பிரிவில் இணையம் வழியாக நடத்தப்படும் ஒன்லைன் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் அட்டை அடிப்படையிலான கொடுப்பனவுகள் ஆகியவை அடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் நாளாந்த அளவு 1.65 மில்லியனைத் தாண்டியுள்ளது.
திட்டமிடப்பட்ட விளம்பர உந்துதலுடன் இந்த எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 2.15 மில்லியன் பரிவர்த்தனைகளாக உயர்த்துவதை இலங்கை மத்திய வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி திட்டம் நாளாந்த டிஜிட்டல் கொடுப்பனவுகளின் அளவை சுமார் 30 வீதம் வரை அதிகரிக்கும் திட்டங்களை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இதன்படி இந்த முயற்சியை ஊக்குவிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் விழிப்புணர்வு திட்டங்கள் நடத்தப்படும் என்று இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் கே.வி.கே. அல்விஸ் தெரிவித்துள்ளார்.டிஜிட்டல் கொடுப்பனவுகளின் பிரிவில் இணையம் வழியாக நடத்தப்படும் ஒன்லைன் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் அட்டை அடிப்படையிலான கொடுப்பனவுகள் ஆகியவை அடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் நாளாந்த அளவு 1.65 மில்லியனைத் தாண்டியுள்ளது. திட்டமிடப்பட்ட விளம்பர உந்துதலுடன் இந்த எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 2.15 மில்லியன் பரிவர்த்தனைகளாக உயர்த்துவதை இலங்கை மத்திய வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.