• May 22 2024

இலங்கை கிரிக்கெட் நிறுவன மோசடி தொடர்பில் விவாதம்! samugammedia

Tamil nila / Aug 24th 2023, 10:40 pm
image

Advertisement

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில், நாடாளுமன்றில் இன்றைய தினம் விவாதிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், ஹேஷா விதானகே இந்த விவாதத்தை அண்மையில் கோரியிருந்த நிலையில், இன்றைய தினம் குறித்த விவாதம், இடம்பெற்றது.

இதன் போது, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டில் மோசடி இடம்பெற்றதாக வெளியான கணக்காளர் நாயகத்தின் அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டது,

அதன்படி, ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், உடனடியாக மாற்றப்பட வேண்டும் என நாடாளுமன்றில் பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இதனை சபையில் குறிப்பிட்டார்.

கிரிக்கெட்டுக்கான புதிய சட்டமூலத்தை தயாரித்து, நாடாளுமன்றில் சமர்ப்பித்து, உடனடியாக அதனை நிறைவேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தம்மிடம் அறிவித்தாக விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.


இலங்கை கிரிக்கெட் நிறுவன மோசடி தொடர்பில் விவாதம் samugammedia ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில், நாடாளுமன்றில் இன்றைய தினம் விவாதிக்கப்பட்டது.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், ஹேஷா விதானகே இந்த விவாதத்தை அண்மையில் கோரியிருந்த நிலையில், இன்றைய தினம் குறித்த விவாதம், இடம்பெற்றது.இதன் போது, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டில் மோசடி இடம்பெற்றதாக வெளியான கணக்காளர் நாயகத்தின் அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டது,அதன்படி, ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், உடனடியாக மாற்றப்பட வேண்டும் என நாடாளுமன்றில் பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டது.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இதனை சபையில் குறிப்பிட்டார்.கிரிக்கெட்டுக்கான புதிய சட்டமூலத்தை தயாரித்து, நாடாளுமன்றில் சமர்ப்பித்து, உடனடியாக அதனை நிறைவேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தம்மிடம் அறிவித்தாக விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement