• Sep 30 2024

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் விசா மோசடி- வெளியான சந்தேகம்! samugammedia

Tamil nila / Jul 29th 2023, 7:05 pm
image

Advertisement

கடந்த 2022 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20-20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக வீசா கோரியவர்களில், விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கவின் இரண்டு மகள்மாரின் பெயர்களும் அடங்கியிருக்கலாம் என சந்தேகம் வெளியடப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த விஜயத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் 68 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

அதே நேரத்தில் 35 தனிப்பட்டவர்களின் பெயர்களையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது.

இந்தநிலையில் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரகத்திடம் கோரப்பட்ட வீசா ஒப்புதல் கடிதத்தில் இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் சமி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சரின் மகள்கள் என தெரிவிக்கப்படும் ஆர் சனலி தினுஸிகா மற்றும் ஆர் ஏ சாரா தினாலி உட்பட்ட 21 பேர் உள்ளடங்கியிருந்தனர்.

இந்த நிலையில் தனி நபர்கள் உலகக் கிண்ண போட்டிகளை காண பயணித்ததாகக் கூறி விசா நோக்கங்களுக்காக கடிதங்களை வழங்கியிருந்தாலும், அவர்களின் பயணங்களுக்கு நிதி வழங்கவில்லை என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

எனினும் அமைச்சரின் மகள்மார் என்ற சந்தேகம் தொடர்பில் அது எதனையும் கூற விரும்பவில்லை என்று இலங்கை கிரிக்கெட் குறிப்பிட்டிருந்தது.

இதனை தவிர விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இது தொடர்பில் கருத்தை கோர தொடர்பு கொண்டபோதும், அவர் பதிலளிக்கவில்லை எனவும் கொழும்பின் ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் விசா மோசடி- வெளியான சந்தேகம் samugammedia கடந்த 2022 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20-20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக வீசா கோரியவர்களில், விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கவின் இரண்டு மகள்மாரின் பெயர்களும் அடங்கியிருக்கலாம் என சந்தேகம் வெளியடப்பட்டுள்ளது.கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த விஜயத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் 68 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.அதே நேரத்தில் 35 தனிப்பட்டவர்களின் பெயர்களையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது.இந்தநிலையில் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரகத்திடம் கோரப்பட்ட வீசா ஒப்புதல் கடிதத்தில் இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் சமி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சரின் மகள்கள் என தெரிவிக்கப்படும் ஆர் சனலி தினுஸிகா மற்றும் ஆர் ஏ சாரா தினாலி உட்பட்ட 21 பேர் உள்ளடங்கியிருந்தனர்.இந்த நிலையில் தனி நபர்கள் உலகக் கிண்ண போட்டிகளை காண பயணித்ததாகக் கூறி விசா நோக்கங்களுக்காக கடிதங்களை வழங்கியிருந்தாலும், அவர்களின் பயணங்களுக்கு நிதி வழங்கவில்லை என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.எனினும் அமைச்சரின் மகள்மார் என்ற சந்தேகம் தொடர்பில் அது எதனையும் கூற விரும்பவில்லை என்று இலங்கை கிரிக்கெட் குறிப்பிட்டிருந்தது.இதனை தவிர விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இது தொடர்பில் கருத்தை கோர தொடர்பு கொண்டபோதும், அவர் பதிலளிக்கவில்லை எனவும் கொழும்பின் ஊடகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement