• May 04 2024

இலங்கையில் தற்போது 260 விமானிகள் மட்டுமே..! சபையில் விமானியாக மாறிய சஜித்..! samugammedia

Chithra / Jun 23rd 2023, 2:19 pm
image

Advertisement

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையிலுள்ள விமானிகள், சர்வதேச நியமங்களை மீறியே பணிபுரியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் சஜித் பிரேமதாச இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

அத்துடன் தனக்கும் விமானத்தை செலுத்துவது பித்தமான விடயம் என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 6 மாத காலப்பகுதியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் இருந்து எழுபது விமானிகள் பணியில் இருந்து விலகியுள்ளதாக தற்போது விமான சேவையில் உள்ள விமானிகள் எண்ணிக்கை 260க்கும் குறைவாகவே காணப்படுகின்றது.

இந்த வருடம் மேலும் 18 விமானிகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இலங்கைக்கு மொத்தமாக 330 விமானிகள் தேவைப்படுகின்றனர்.

ஆனால் தற்போது 260 விமானிகள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில் தற்போதுள்ள விமானிகள், சர்வதேச நியமங்களை மீறியே பணிபுரியவேண்டியுள்ளது.

எனக்கு விமானத்தை செலுத்துவது என்பது, பித்தமான விடயம். தற்போதுள்ள விமானிகளுக்கு மன அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளது.

ஓய்வு பெறுவதற்கான மணித்தியாலங்கள் வழங்கப்படாவிட்டால் அவர்கள் ஆபத்தான நிலையை எதிர்நோக்குவார்கள்.

அதிகளவான சேவையை விமானிகளிடம் இருந்து பெற்றால் பல பிரச்சனைகள் ஏற்படும்.

எனவே இந்த விமானிகளின் பற்றாக்குறை தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் எடுக்கவேண்டும்

இலங்கையில் தற்போது 260 விமானிகள் மட்டுமே. சபையில் விமானியாக மாறிய சஜித். samugammedia ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையிலுள்ள விமானிகள், சர்வதேச நியமங்களை மீறியே பணிபுரியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் சஜித் பிரேமதாச இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.அத்துடன் தனக்கும் விமானத்தை செலுத்துவது பித்தமான விடயம் என்று குறிப்பிட்டிருந்தார்.கடந்த 6 மாத காலப்பகுதியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் இருந்து எழுபது விமானிகள் பணியில் இருந்து விலகியுள்ளதாக தற்போது விமான சேவையில் உள்ள விமானிகள் எண்ணிக்கை 260க்கும் குறைவாகவே காணப்படுகின்றது.இந்த வருடம் மேலும் 18 விமானிகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.இலங்கைக்கு மொத்தமாக 330 விமானிகள் தேவைப்படுகின்றனர்.ஆனால் தற்போது 260 விமானிகள் மட்டுமே உள்ளனர்.இந்நிலையில் தற்போதுள்ள விமானிகள், சர்வதேச நியமங்களை மீறியே பணிபுரியவேண்டியுள்ளது.எனக்கு விமானத்தை செலுத்துவது என்பது, பித்தமான விடயம். தற்போதுள்ள விமானிகளுக்கு மன அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளது.ஓய்வு பெறுவதற்கான மணித்தியாலங்கள் வழங்கப்படாவிட்டால் அவர்கள் ஆபத்தான நிலையை எதிர்நோக்குவார்கள்.அதிகளவான சேவையை விமானிகளிடம் இருந்து பெற்றால் பல பிரச்சனைகள் ஏற்படும்.எனவே இந்த விமானிகளின் பற்றாக்குறை தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் எடுக்கவேண்டும்

Advertisement

Advertisement

Advertisement