நாட்டில் தற்போது நிலவி வருகின்ற மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு குறைவடைந்து வந்தாலும், எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மீண்டும் மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம் வரட்சியே என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரக்கறிகளுக்கான தட்டுப்பாடை கட்டுப்படுத்த உரிய வேலைத்திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாயத் திணைக்களத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய பொது சந்தையில் இன்று கொள்வனவு செய்யப்படும் மரக்கறி விலை பட்டியல் தொடர்பாக நுவரெலிய பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஆயிரம் ரூபாவுக்கு அதிகமாக உச்ச விலையை கொண்டிருந்த கரட்டின் விலை வீழ்ச்சியடைந்து,
கிலோ கிராம் ஒன்றின் விலை கொள்வனவு விலை 900/= ரூபாய் தொடக்கம் 950/=ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மரக் கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம். - அமைச்சர் விடுத்த எச்சரிக்கை நாட்டில் தற்போது நிலவி வருகின்ற மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு குறைவடைந்து வந்தாலும், எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மீண்டும் மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதற்கு முக்கிய காரணம் வரட்சியே என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மரக்கறிகளுக்கான தட்டுப்பாடை கட்டுப்படுத்த உரிய வேலைத்திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாயத் திணைக்களத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.இதேவேளை கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய பொது சந்தையில் இன்று கொள்வனவு செய்யப்படும் மரக்கறி விலை பட்டியல் தொடர்பாக நுவரெலிய பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் அறிவித்துள்ளது.இதனடிப்படையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஆயிரம் ரூபாவுக்கு அதிகமாக உச்ச விலையை கொண்டிருந்த கரட்டின் விலை வீழ்ச்சியடைந்து,கிலோ கிராம் ஒன்றின் விலை கொள்வனவு விலை 900/= ரூபாய் தொடக்கம் 950/=ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.