• Jan 02 2025

ரணில் தரப்புடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டுவந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Chithra / Dec 29th 2024, 8:55 am
image

 

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட புதிய ஜனநாயக முன்னணியின் கூட்டணி தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது தனிக் கட்சியாக மாறியுள்ளது.

உள்ளூராட்சி சபை அல்லது மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாகவே எமது தரப்பினர் போட்டியிடுவார்கள்.

சுதந்திரக் கட்சிக்கும், புதிய ஜனநாயக முன்னணிக்கும் இடையிலான கூட்டணியும் முடிவுக்கு வந்துள்ளது என்றார்.

உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய விரைவில் இக்கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ஜனவரி 2ஆம் திகதியிலிருந்து கட்சியின் புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஆட்சியமைத்த கட்சி என்ற ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இனிவரும் தேர்தல்களில் கதிரை அல்லது கை சின்னத்தில் போட்டியிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் தரப்புடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டுவந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட புதிய ஜனநாயக முன்னணியின் கூட்டணி தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது தனிக் கட்சியாக மாறியுள்ளது.உள்ளூராட்சி சபை அல்லது மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாகவே எமது தரப்பினர் போட்டியிடுவார்கள்.சுதந்திரக் கட்சிக்கும், புதிய ஜனநாயக முன்னணிக்கும் இடையிலான கூட்டணியும் முடிவுக்கு வந்துள்ளது என்றார்.உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய விரைவில் இக்கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.அத்துடன் ஜனவரி 2ஆம் திகதியிலிருந்து கட்சியின் புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் ஆட்சியமைத்த கட்சி என்ற ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இனிவரும் தேர்தல்களில் கதிரை அல்லது கை சின்னத்தில் போட்டியிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement