• Apr 27 2024

டிஜிட்டல் மயமாகும் இலங்கை...! எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இனி காத்திருக்கத் தேவையில்லை...! வெளியான அறிவிப்பு...!samugammedia

Sharmi / Sep 15th 2023, 12:03 pm
image

Advertisement

இலங்கையிலுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் தானியங்கி எரிபொருள் பம்பிகள் மற்றும் பணம் அறவீட்டு உபகரணத்தை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த வருடம் முதல் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தானியங்கி பம்பிகள் மற்றும் உபகரணம் பொருத்தப்பட்ட பின்னர், எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரும் நுகர்வோர், தமக்குத் தேவையான எரிபொருளை தாமே பெற்றுக் கொண்டு உரிய உபகரணத்தில் பணத்தை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு விரைவாக எரிபொருள் முகாமைத்துவத்தை மேற்கொள்ளவும் அதற்கான தொகையை அறவிட்டுக் கொள்ளவும் வசதி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, அடுத்த வருடம் முதல் எரிபொருள் விலைகள் தன்னியக்கமாக தினந்தோறும் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என மின்சக்தி,  எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் மயமாகும் இலங்கை. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இனி காத்திருக்கத் தேவையில்லை. வெளியான அறிவிப்பு.samugammedia இலங்கையிலுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் தானியங்கி எரிபொருள் பம்பிகள் மற்றும் பணம் அறவீட்டு உபகரணத்தை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அடுத்த வருடம் முதல் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.இந்த தானியங்கி பம்பிகள் மற்றும் உபகரணம் பொருத்தப்பட்ட பின்னர், எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரும் நுகர்வோர், தமக்குத் தேவையான எரிபொருளை தாமே பெற்றுக் கொண்டு உரிய உபகரணத்தில் பணத்தை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.இதன் மூலம் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு விரைவாக எரிபொருள் முகாமைத்துவத்தை மேற்கொள்ளவும் அதற்கான தொகையை அறவிட்டுக் கொள்ளவும் வசதி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.அதேவேளை, அடுத்த வருடம் முதல் எரிபொருள் விலைகள் தன்னியக்கமாக தினந்தோறும் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என மின்சக்தி,  எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement