• May 17 2024

ஐ.நாவின் முக்கிய ஆணைக்குழுவில் இடம்பிடித்த இலங்கை..!samugammedia

Sharmi / Apr 7th 2023, 9:54 pm
image

Advertisement

ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களின் நிலை குறித்த ஆணைக்குழுவிற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபையின் உறுப்பினர்கள் 2024 முதல் 2028 வரையிலான நான்கு வருட காலத்திற்கு இலங்கையை ஆணைக்குழுவிற்கு தெரிவு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பெண்களின் உரிமைகளை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடுகளை நீக்குவதற்கான அதன் அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு, இலங்கை இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ், பெல்ஜியம், பொலிவியா, கொலம்பியா, ருமேனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இவ்வருடம் ஆணைக்குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட ஏனைய நாடுகளாகும் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐ.நாவின் முக்கிய ஆணைக்குழுவில் இடம்பிடித்த இலங்கை.samugammedia ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களின் நிலை குறித்த ஆணைக்குழுவிற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபையின் உறுப்பினர்கள் 2024 முதல் 2028 வரையிலான நான்கு வருட காலத்திற்கு இலங்கையை ஆணைக்குழுவிற்கு தெரிவு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பெண்களின் உரிமைகளை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடுகளை நீக்குவதற்கான அதன் அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு, இலங்கை இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ், பெல்ஜியம், பொலிவியா, கொலம்பியா, ருமேனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இவ்வருடம் ஆணைக்குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட ஏனைய நாடுகளாகும் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement