• May 22 2024

மிலேச்சத்தனமான குண்டு தாக்குதல் காரணமாகவே இலங்கை இன்று ஆதாள பாதாளத்துக்கு சென்றுள்ளது-சீயோன் தேவாலய போதகர் ரொசான் மகேசன் கருத்து!samugammedia

Sharmi / Apr 21st 2023, 9:33 pm
image

Advertisement

மிலேச்சத்தனமான குண்டு தாக்குதல் காரணமாகவே இன்று இலங்கை ஆதாள பாதாளத்துக்கு சென்றுள்ளது என சீயோன் தேவாலய போதகர் ரொசான் மகேசன் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.

மட்டக்களப்பு சீயோன் தேவாயலத்தில் இந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் காரணமாக் சிறுவர்கள் 14 பேர் உட்பட 31 பேர் கொல்லப்பட்டதுடன் 85 பேருக்கு மேல் படுகாயமடைந்தனர்.

இன்றைய தினம் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை நினைவுகூரும் வகையிலான நிகழ்வு மட்டக்களப்பில் மன்றேசா வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சியோன் தேவாலயத்தில் நடைபெற்றது.
சீயோன் தேவாலய பிரதம போதகர் ரொஷான் தலைமையில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்றைய தினம் சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு படுகொலை நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

இன்று நாட்டில் பொருளாதார சுமை வாழ்வாதார சுமை நாடு இஸ்தித்திரத்தன்மையற்ற நிலை இவை அனைத்துக்கும் ஏப்ரல் 21 அன்று நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலின் பிரதிபலனாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இன்று நான்கு வருடங்கள் கடந்து இருந்தாலும் எங்கள் வேதாகமத்தில் சொல்வது போன்று நாங்கள் அவர்களை மன்னித்து விட்டோம்.ஆனாலும் அந்த சின்னம் சிறார்களின் உயிரிழப்பு இன்றுவரை எங்களது நெஞ்சங்களில் மாறாத வடுவாகத்தான் இருக்கின்றது.

இந்த தாக்குதலில் உயிர் இழந்த அனைவருக்கும் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





மிலேச்சத்தனமான குண்டு தாக்குதல் காரணமாகவே இலங்கை இன்று ஆதாள பாதாளத்துக்கு சென்றுள்ளது-சீயோன் தேவாலய போதகர் ரொசான் மகேசன் கருத்துsamugammedia மிலேச்சத்தனமான குண்டு தாக்குதல் காரணமாகவே இன்று இலங்கை ஆதாள பாதாளத்துக்கு சென்றுள்ளது என சீயோன் தேவாலய போதகர் ரொசான் மகேசன் தெரிவித்துள்ளார்.ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.மட்டக்களப்பு சீயோன் தேவாயலத்தில் இந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் காரணமாக் சிறுவர்கள் 14 பேர் உட்பட 31 பேர் கொல்லப்பட்டதுடன் 85 பேருக்கு மேல் படுகாயமடைந்தனர்.இன்றைய தினம் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை நினைவுகூரும் வகையிலான நிகழ்வு மட்டக்களப்பில் மன்றேசா வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சியோன் தேவாலயத்தில் நடைபெற்றது.சீயோன் தேவாலய பிரதம போதகர் ரொஷான் தலைமையில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்றைய தினம் சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு படுகொலை நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதன்போது கருத்து தெரிவித்த அவர்,இன்று நாட்டில் பொருளாதார சுமை வாழ்வாதார சுமை நாடு இஸ்தித்திரத்தன்மையற்ற நிலை இவை அனைத்துக்கும் ஏப்ரல் 21 அன்று நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலின் பிரதிபலனாகவே நாங்கள் பார்க்கின்றோம்.இன்று நான்கு வருடங்கள் கடந்து இருந்தாலும் எங்கள் வேதாகமத்தில் சொல்வது போன்று நாங்கள் அவர்களை மன்னித்து விட்டோம்.ஆனாலும் அந்த சின்னம் சிறார்களின் உயிரிழப்பு இன்றுவரை எங்களது நெஞ்சங்களில் மாறாத வடுவாகத்தான் இருக்கின்றது.இந்த தாக்குதலில் உயிர் இழந்த அனைவருக்கும் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement