• May 08 2024

மோசமான நிலையில் இலங்கை - பாடசாலையை விட்டு வெளியேறி வெளிநாடு செல்லும் மாணவர்கள்! samugammedia

Chithra / Aug 7th 2023, 8:41 am
image

Advertisement

வேயங்கொடை புனித மரியாள் தேசிய பாடசாலையில் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்ற 27 மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு மாணவர்கள் விலகுவது ஒரு நாடு என்ற ரீதியில் பாதகமான நிலை என அந்த பாடசாலையின் அதிபர் பி.டி.ஐ.கே.கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

புனித மரியாள் பாடசாலைக்காக 21 வருடங்களாக விளையாட்டுத்துறையில் ஈடுபட்டு வரும் முன்னாள் மாணவர்களின் நட்பு ரீதியான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

ஏராளமான வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.

இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த 27 மாணவர்களும் அந்தப் பாடசாலைகளில் இருந்து விலகியுள்ளனர். 

மோசமான நிலையில் இலங்கை - பாடசாலையை விட்டு வெளியேறி வெளிநாடு செல்லும் மாணவர்கள் samugammedia வேயங்கொடை புனித மரியாள் தேசிய பாடசாலையில் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்ற 27 மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.இவ்வாறு மாணவர்கள் விலகுவது ஒரு நாடு என்ற ரீதியில் பாதகமான நிலை என அந்த பாடசாலையின் அதிபர் பி.டி.ஐ.கே.கருணாரத்ன தெரிவித்துள்ளார்.புனித மரியாள் பாடசாலைக்காக 21 வருடங்களாக விளையாட்டுத்துறையில் ஈடுபட்டு வரும் முன்னாள் மாணவர்களின் நட்பு ரீதியான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.ஏராளமான வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த 27 மாணவர்களும் அந்தப் பாடசாலைகளில் இருந்து விலகியுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement