• May 14 2024

தனி மனிதனின் இரும்புக் கரங்களுக்கு இலங்கை சிக்கி அடிமைப்பட்டுள்ளது - வேலு குமார் சபையில் காட்டம் ! SamugamMedia

Tamil nila / Feb 23rd 2023, 4:45 pm
image

Advertisement

இன்று இலங்கை தனி மனிதனின் இரும்புக் கரங்களுக்கு சிக்கி அடிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் குற்றம் சுமத்தியுள்ளார்.


இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே இவ்வாறு அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.


உயர் நீதிமன்றத்தின் தீர்பையே ரணில் விக்கிரமசிங்க அவரது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகவும் மகாண சபைகள் இயங்கவில்லை எனவும் 

இன்னும் ஒர் இரு நாட்களின் உள்ளுராட்சி மன்றங்களும் இல்லை எனவும் இந்த நாடாளுமன்றமும் ஜனாதிபதியின் கையிலே ஊசல் ஆடிக்கொண்டிருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியால் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றத்தைக்கூட கலைப்பதற்கான அதிகாரம் வந்துள்ளதாகவும் எனவே நாடாளுமன்றம் ஜனாதிபதியின் கைகளில் ஊசல் ஆடுவதாக வேலு குமார் குறிப்பிடுகின்றார்.


குறிப்பாக இந்த நாட்டின் அரசியலமைப்பை தனக்கு தேவையான வகையில் பயன்படுத்தியுள்ள ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பையே குழிதோண்டிப் புதைத்துள்ளதாக வேலு குமார் குற்றம் சுமத்துகின்றார்.


இவ்வாறு, ஜனாநாயகத்தை குழிதோண்டி புதைப்பதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இன்று சபையில் கைதட்டி ஆரவாரம் செய்வதாக வேலு குமார் மேலும் குற்றம் சுமத்தியிருந்தார்.

தனி மனிதனின் இரும்புக் கரங்களுக்கு இலங்கை சிக்கி அடிமைப்பட்டுள்ளது - வேலு குமார் சபையில் காட்டம் SamugamMedia இன்று இலங்கை தனி மனிதனின் இரும்புக் கரங்களுக்கு சிக்கி அடிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் குற்றம் சுமத்தியுள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே இவ்வாறு அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.உயர் நீதிமன்றத்தின் தீர்பையே ரணில் விக்கிரமசிங்க அவரது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகவும் மகாண சபைகள் இயங்கவில்லை எனவும் இன்னும் ஒர் இரு நாட்களின் உள்ளுராட்சி மன்றங்களும் இல்லை எனவும் இந்த நாடாளுமன்றமும் ஜனாதிபதியின் கையிலே ஊசல் ஆடிக்கொண்டிருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியால் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றத்தைக்கூட கலைப்பதற்கான அதிகாரம் வந்துள்ளதாகவும் எனவே நாடாளுமன்றம் ஜனாதிபதியின் கைகளில் ஊசல் ஆடுவதாக வேலு குமார் குறிப்பிடுகின்றார்.குறிப்பாக இந்த நாட்டின் அரசியலமைப்பை தனக்கு தேவையான வகையில் பயன்படுத்தியுள்ள ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பையே குழிதோண்டிப் புதைத்துள்ளதாக வேலு குமார் குற்றம் சுமத்துகின்றார்.இவ்வாறு, ஜனாநாயகத்தை குழிதோண்டி புதைப்பதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இன்று சபையில் கைதட்டி ஆரவாரம் செய்வதாக வேலு குமார் மேலும் குற்றம் சுமத்தியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement