• May 18 2024

இலங்கை : ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிகாலம் நீட்டிப்பு..!!

Tamil nila / Apr 13th 2024, 6:28 pm
image

Advertisement

தேர்தல் முறையை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜூன் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர குறிப்பிட்டார்.

2023 ஒக்டோபர் 15 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் இம்மாதம் 15 ஆம் திகதி நிறைவடையவிருந்தது. இதேவேளை, தேர்தல் முறைமை திருத்துவது தொடர்பில் மூன்று உப குழுக்களின் அறிக்கைகளைப் பெற்று ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக செயலாளர் மாதவ தேவசுரேந்திர தெரிவித்துள்ளார்.

இலங்கை : ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிகாலம் நீட்டிப்பு. தேர்தல் முறையை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜூன் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர குறிப்பிட்டார்.2023 ஒக்டோபர் 15 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் இம்மாதம் 15 ஆம் திகதி நிறைவடையவிருந்தது. இதேவேளை, தேர்தல் முறைமை திருத்துவது தொடர்பில் மூன்று உப குழுக்களின் அறிக்கைகளைப் பெற்று ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக செயலாளர் மாதவ தேவசுரேந்திர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement