• May 07 2024

இலங்கையில் 111 மருந்துகளுக்கு தட்டுப்பாடு! சுகாதார அமைச்சர் அதிர்ச்சி தகவல் samugammedia

Chithra / Jun 1st 2023, 5:32 pm
image

Advertisement

இலங்கையில் தற்போது 111 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த விடயத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் நாட்டில் சுமார் 200 பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்த நிலையில் தற்போது அது 111 ஆகக் குறைந்துள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அது 70 ஆகக் குறையும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதி உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த ஆண்டை விட பொருளாதார நிலை வலுவடைந்துள்ளதாக தெரிவித்தார்.

எனினும் நிதியை விடுவிப்பதில் பெற்றுக் கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 111 மருந்துகளுக்கு தட்டுப்பாடு சுகாதார அமைச்சர் அதிர்ச்சி தகவல் samugammedia இலங்கையில் தற்போது 111 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இதனையடுத்து குறித்த விடயத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மூன்று மாதங்களுக்கு முன்னர் நாட்டில் சுமார் 200 பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்த நிலையில் தற்போது அது 111 ஆகக் குறைந்துள்ளது.அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அது 70 ஆகக் குறையும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதி உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த ஆண்டை விட பொருளாதார நிலை வலுவடைந்துள்ளதாக தெரிவித்தார்.எனினும் நிதியை விடுவிப்பதில் பெற்றுக் கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement