• Nov 23 2024

அறுகம்குடா பயண எச்சரிக்கையை மீளப்பெறுமாறு அமெரிக்காவிடம் இலங்கை கோரிக்கை

Chithra / Nov 12th 2024, 12:03 pm
image


  

மறு அறிவித்தல் வரை அறுகம்பே பிரதேசத்தில் பயணிப்பதை தவிர்க்குமாறு விடுக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பை வாபஸ் பெறுமாறு வெளிவிவகார அமைச்சு அமெரிக்க தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறுகம்பே பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக கடந்த மாதம் 23ஆம் திகதி அமெரிக்க தூதரகம் தனது பிரஜைகளுக்கு அறிவித்திருந்தது.

பின்னர் சம்பந்தப்பட்ட இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்ததுடன், 

சம்பவம் தொடர்பாக 6 பேர் தற்போது காவலில் வைக்கப்பட்டு விசாரணணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அறுகம்குடா பயண எச்சரிக்கையை மீளப்பெறுமாறு அமெரிக்காவிடம் இலங்கை கோரிக்கை   மறு அறிவித்தல் வரை அறுகம்பே பிரதேசத்தில் பயணிப்பதை தவிர்க்குமாறு விடுக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பை வாபஸ் பெறுமாறு வெளிவிவகார அமைச்சு அமெரிக்க தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.எவ்வாறாயினும், இது தொடர்பில் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.அறுகம்பே பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக கடந்த மாதம் 23ஆம் திகதி அமெரிக்க தூதரகம் தனது பிரஜைகளுக்கு அறிவித்திருந்தது.பின்னர் சம்பந்தப்பட்ட இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்ததுடன், சம்பவம் தொடர்பாக 6 பேர் தற்போது காவலில் வைக்கப்பட்டு விசாரணணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement