அரசாங்கம் அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் செயல்முறையை நிராகரித்து, இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் மருந்துபொருட்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாக மாறுவருகிறது. அதற்கு சிறந்த உதாரணத்தை மருந்து துறையில் கண்டுகொள்ள முடியும்.
இதனால் மருந்து பொருட்களின் தரம் தொடர்பில் பாரிய பிரச்சினை இருக்கிறது.
இந்தியா தனது இராணுவ தேவைக்காக இலங்கையின் தேசிய பாதுகாப்பை பழி எடுக்கிறது. மருந்து கொள்வனவிலும் அவ்வாறே இடம்பெறுகிறது. இந்தியாவின் வியாபார நோக்கத்துக்காக எமது பொது சுகாதாரத்தை பலி கொடுக்கிறது.
நாடுகளின் அரசாங்கங்கள் ஊடாக கொள்முதல் செயல்முறை இல்லாமல் கொண்டுவரப்படும் மருந்து, உரிய தரத்தில் இருப்பது என்பது இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என கேட்டபோது, அவை இலங்கையில் பதிவு செய்யப்பட தேவையில்லை. அந்தந்த நாடுகளில் பதிவு செய்யப்பட்டிருந்தால் போதுமானது என அமைச்சரவை ஊடக சந்திப்பின்போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.
இது இந்திய ஒப்பந்தத்தில் இருந்த ஒரு விடயமாகும் என அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் ஒரு பகுதியாக மாறுவரும் இலங்கை; பலி கொடுக்கப்படும் பொது சுகாதாரம் புபுது ஜயகொட சுட்டிக்காட்டு அரசாங்கம் அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் செயல்முறையை நிராகரித்து, இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் மருந்துபொருட்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாக மாறுவருகிறது. அதற்கு சிறந்த உதாரணத்தை மருந்து துறையில் கண்டுகொள்ள முடியும்.இதனால் மருந்து பொருட்களின் தரம் தொடர்பில் பாரிய பிரச்சினை இருக்கிறது. இந்தியா தனது இராணுவ தேவைக்காக இலங்கையின் தேசிய பாதுகாப்பை பழி எடுக்கிறது. மருந்து கொள்வனவிலும் அவ்வாறே இடம்பெறுகிறது. இந்தியாவின் வியாபார நோக்கத்துக்காக எமது பொது சுகாதாரத்தை பலி கொடுக்கிறது.நாடுகளின் அரசாங்கங்கள் ஊடாக கொள்முதல் செயல்முறை இல்லாமல் கொண்டுவரப்படும் மருந்து, உரிய தரத்தில் இருப்பது என்பது இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என கேட்டபோது, அவை இலங்கையில் பதிவு செய்யப்பட தேவையில்லை. அந்தந்த நாடுகளில் பதிவு செய்யப்பட்டிருந்தால் போதுமானது என அமைச்சரவை ஊடக சந்திப்பின்போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். இது இந்திய ஒப்பந்தத்தில் இருந்த ஒரு விடயமாகும் என அவர் தெரிவித்தார்.