• Mar 11 2025

இலங்கையில் சினிமா பணியில் நடந்த பரபரப்பு - கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு! ஓருவர் உயிரிழப்பு

Chithra / Mar 27th 2024, 7:56 am
image

 

நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பணக் கொள்ளைக்காக வந்த மூவரில் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐபோன்களை விற்பனை செய்வதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்து கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்தவர்களிடம் கொள்ளையர்கள் பணத்தைத் திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விளம்பரத்திற்கமைய, ருவன்வெல்ல பிரதேசத்திற்கு கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த குழுவொன்றிற்கு ஏற்பட்ட, சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.

அதற்கமைய, அந்த குழுவினர் பொலிஸ் அதிகாரிகளுடன் அவர்களைச் சந்திக்கச் சென்றதாக தெரியவந்துள்ளது.

அவர்களை நாரம்மல பகுதியில் உள்ள இடத்திற்கு வருமாறு கூறிய கொள்ளையர்கள், அந்த இடத்தை அடைந்ததும்  கூரிய ஆயுதங்களால் அவர்களது காரை தாக்கியுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது, ​​கொள்ளையர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இரண்டு கொள்ளையர்கள் தப்பியோடியதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கொள்ளையர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த இருவர், கொள்ளையர்களின் தாக்குதலால் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இலங்கையில் சினிமா பணியில் நடந்த பரபரப்பு - கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு ஓருவர் உயிரிழப்பு  நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பணக் கொள்ளைக்காக வந்த மூவரில் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஐபோன்களை விற்பனை செய்வதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்து கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்தவர்களிடம் கொள்ளையர்கள் பணத்தைத் திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விளம்பரத்திற்கமைய, ருவன்வெல்ல பிரதேசத்திற்கு கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த குழுவொன்றிற்கு ஏற்பட்ட, சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.அதற்கமைய, அந்த குழுவினர் பொலிஸ் அதிகாரிகளுடன் அவர்களைச் சந்திக்கச் சென்றதாக தெரியவந்துள்ளது.அவர்களை நாரம்மல பகுதியில் உள்ள இடத்திற்கு வருமாறு கூறிய கொள்ளையர்கள், அந்த இடத்தை அடைந்ததும்  கூரிய ஆயுதங்களால் அவர்களது காரை தாக்கியுள்ளனர்.பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது, ​​கொள்ளையர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இரண்டு கொள்ளையர்கள் தப்பியோடியதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கொள்ளையர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.மேலும், கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த இருவர், கொள்ளையர்களின் தாக்குதலால் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement