• May 19 2024

இரு போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை இழந்தது இலங்கை கால்பந்தாட்ட அணி! samugammedia

Chithra / Apr 13th 2023, 9:30 am
image

Advertisement


இரண்டு சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து இலங்கை தேசிய கால்பந்து அணியை நீக்க சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

2024 பாரிஸ் ஒலிம்பிக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான ஆசிய தகுதிகாண் போட்டி மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 23 வயதுக்குட்பட கத்தார் ஆசியக் கிண்ணத் தகுதிகாண் போட்டி ஆகியவற்றில் பங்கேற்க தகுதி இழந்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்ட இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்து செய்வதற்கான தீர்மானத்திற்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இரு போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை இழந்தது இலங்கை கால்பந்தாட்ட அணி samugammedia இரண்டு சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து இலங்கை தேசிய கால்பந்து அணியை நீக்க சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்துள்ளது.2024 பாரிஸ் ஒலிம்பிக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான ஆசிய தகுதிகாண் போட்டி மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 23 வயதுக்குட்பட கத்தார் ஆசியக் கிண்ணத் தகுதிகாண் போட்டி ஆகியவற்றில் பங்கேற்க தகுதி இழந்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்ட இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்து செய்வதற்கான தீர்மானத்திற்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement