• Apr 27 2025

AI தொழில்நுட்பத்தால் ஆபத்தில் இலங்கை சிறுமிகள் - குவியும் முறைப்பாடுகள்

Chithra / Mar 13th 2025, 8:49 am
image

 

இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த பொருத்தமற்ற செயலை 13 தொடக்கம் 17 வயதுடைய சிறுவர்கள் செய்கிறார்கள் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமலாக்க இயக்குநர் வழக்கறிஞர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் பெற்றோர் முறைப்பாடு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை செய்த சிறுவர்களும் பாதிக்கப்பட்ட சிறுமிகளும் ஒரே வயதுடைய நண்பர்களாகும்.

ஏன் தங்கள் வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்களைத் திருத்தி ஒன்லைனில் பதிவேற்ற AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டபோது, ​​அதை முயற்சிக்க விளையாட்டதாக செய்ததாகக் கூறுகிறார்கள்.

இவை அந்த சிறுமிகளுக்கு தெரியாமல் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யும் மோசமான செயல் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

AI தொழில்நுட்பத்தால் ஆபத்தில் இலங்கை சிறுமிகள் - குவியும் முறைப்பாடுகள்  இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த பொருத்தமற்ற செயலை 13 தொடக்கம் 17 வயதுடைய சிறுவர்கள் செய்கிறார்கள் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமலாக்க இயக்குநர் வழக்கறிஞர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் பெற்றோர் முறைப்பாடு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதனை செய்த சிறுவர்களும் பாதிக்கப்பட்ட சிறுமிகளும் ஒரே வயதுடைய நண்பர்களாகும்.ஏன் தங்கள் வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்களைத் திருத்தி ஒன்லைனில் பதிவேற்ற AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டபோது, ​​அதை முயற்சிக்க விளையாட்டதாக செய்ததாகக் கூறுகிறார்கள்.இவை அந்த சிறுமிகளுக்கு தெரியாமல் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யும் மோசமான செயல் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement