• Jun 28 2024

இந்தியப் படகு மோதி இலங்கை கடற்படை வீரர் பலி - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியை பிடிக்க சென்றபோது பரபரப்பு!

Chithra / Jun 25th 2024, 8:05 am
image

Advertisement

 யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற  இலங்கை கடற்படை வீரர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

ரத்நாயக்க என்ற கடற்படை வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்போது 10 இந்திய மீனவர்களும் ஒரு படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று (25) அதிகாலை சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைமடிப் படகை பிடிக்க காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படையினர் சென்றிருந்தனர்.

இந்தியப் மீனவர்களின் படகை கைப்பற்ற முனைந்தபோது இந்திய மீனவர்களுக்கும் கடற்படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதன்போது கடற்படை வீரரின் மார்பில் இந்திய படகு மோதி உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரும், மீனவர்கள் வந்த படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரதே பரிசோதனையின் பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை   யாழ்ப்பாணம் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியப் படகு மோதி இலங்கை கடற்படை வீரர் பலி - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியை பிடிக்க சென்றபோது பரபரப்பு  யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற  இலங்கை கடற்படை வீரர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.ரத்நாயக்க என்ற கடற்படை வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இதன்போது 10 இந்திய மீனவர்களும் ஒரு படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று (25) அதிகாலை சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைமடிப் படகை பிடிக்க காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படையினர் சென்றிருந்தனர்.இந்தியப் மீனவர்களின் படகை கைப்பற்ற முனைந்தபோது இந்திய மீனவர்களுக்கும் கடற்படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதன்போது கடற்படை வீரரின் மார்பில் இந்திய படகு மோதி உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரும், மீனவர்கள் வந்த படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.பிரதே பரிசோதனையின் பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை   யாழ்ப்பாணம் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement