தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப சீனியர் சீசன் 5 கோலாகலமாக தொடங்கியுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கும் கள அமைத்துக்கொடுக்கும் மேடையாக சரிகமப நிகழ்ச்சி அமைந்துள்ளது.
புலம்பெயர் தேசத்து தமிழர்கள் முதல் இலங்கையில் இருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டு தம் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இம்முறை ஈழத்தமிழர்கள் மூவர் சரிகமப சீனியர் சீசன் 5 இல் கலந்துகொண்டுள்ளனர்.
அந்தவகையில் அம்பாறை பிறதேசத்தில் இருந்து சபேசன், சுவிட்சர்லாந்தில் இருந்து புலம் பெயர் ஈழத்து மகன் பிரஷான், மற்றும் ஈழத்தின் பிரபல நாதஸ்வர வித்துவானின் மகளான தரங்கினி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
அதில் போட்டியாளர் பிரஷான், இலங்கை குடியுரிமை இல்லாமலும், சுவிஸ் குடியுரிமை இல்லாமலும் 30 நாள் விசாவில் இந்தியா வந்து சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியில் பாடியிருப்பது அனைவரது மனதையும் உருக வைத்திருக்கிறது.
அவர் தான் முப்பது நாட்கள் மட்டுமே விசாவில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்ததாகவும் தனக்கு எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் தவிப்பதாகவும் கூறி இருந்தார்.
பிறந்து வளர்ந்த இலங்கையில் தனக்கு குடியுரிமை இல்லாமலும், தான் குடியேறிய சுவிஸ் குடியுரிமை இல்லாமலும் தான் கஷ்டப்படுவதாக பேசி இருந்தார்.
அதைக் கேட்டு டி ராஜேந்தர் அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.
பிரஷான் குடும்பம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதியாக சுவிஷுக்கு சென்று இருக்கிறார்கள்.
இவருடைய வீட்டில் இவருக்கு மூன்று தம்பிகளும் இருக்கிறார்களாம். மொத்த குடும்பமும் இப்போது சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்தாலும் அங்கு இன்னும் குடியுரிமை கிடைக்கவில்லையாம். அதேபோல இலங்கையிலும் இவர்களுக்கு குடியுரிமை இல்லையாம். இதனால் தாங்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பதாக கூறியிருக்கிறார்.
மேலும் பிரஷான் பேசும்போது, தனக்கு தெரிந்தது இசை மட்டும் தான். என்னுடைய மனதில் பல கஷ்டங்கள் இருக்கும் போது நான் பாடலை மட்டும் தான் என் துணையாக கொண்டிருக்கிறேன்.அந்த பாடலை நம்பி தான் நான் கடந்த வருடத்திலும் சரிகமப நிகழ்ச்சியின் ஆடிஷனில் கலந்து கொண்டேன்.
ஆனால் அதில் வெற்றி பெற்றாலும் என்னால் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. அதேபோல இந்த சீசனிலும் நான் செலக்ட் ஆனாலும் கூட என்னால் தொடர்ந்து கலந்து கொள்ள முடியாது, காரணம் நான் 30 நாள் விசாவில்தான் இந்தியாவிற்கு வந்திருக்கிறேன்.
வரும் ஜூன் மூன்றாம் தேதி இந்தியாவை விட்டு நான் போய் ஆக வேண்டும் என்று கண்கலங்க பேசி இருந்தார்.
பிறகு "உயிரின் உயிரே ஒரு நாள் உறவே" என்ற பாடலை பாடியிருந்தார். இவருடைய பாடலை கேட்டு நடுவர்கள் மெய் மறந்து இருந்தனர்.
அது போல இவருடைய கதையை கேட்டு சிறப்பு விருந்தினராக வந்து டி ராஜேந்தர் கண்கலங்க பேசி இருந்தார்.
பிரஷானை கட்டி அணைத்து, "வாழ்க்கையுடைய நிலைமையை பார்க்கும்போது மனசு ரொம்ப பாரம் ஆயிடுச்சு. ஆனா ஒன்னு ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு நாழிகைக்கும் ஒவ்வொரு தினத்திற்கும் கடவுள் ஒரு கணக்கு வைத்து இருக்கிறான்.
மதங்களை எல்லாம் மீறி நான் சொல்லுறேன் அந்தக் கணக்கை எல்லாம் மீறி நம்மால் எதுவும் பண்ண முடியாது. ஜூன் 3ஆம் தேதி ஊருக்கு புறப்பட்டு போகணும் என்று சொல்லி இருக்கிறாய் பிரஷான் நீ விமானத்தில் பறக்கலாம். ஆனால் இந்த சரிகமபவின் சங்கீத குடும்பம் உன்னை மறக்காது. எங்கள் நெஞ்சங்களில் எல்லாம் உண்மை சுமக்கிறோம் என்றும் வாழ்க பல்லாண்டு" என்று வாழ்த்துகிறார்.
உனக்குன்னு ஒரு அடையாளம் இல்லை என்று நினைக்காதே இனி இசை கலைஞர் என்பதுதான் உன்னுடைய அடையாளம். இந்த சரிகமப நிகழ்ச்சி உனக்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்றும் ராஜேந்தர் உட்பட நடுவர்களும் பிரஷான்னை வாழ்த்தி இருக்கிறார்கள்.
விசா இல்லாமல் தவிக்கும் இலங்கை தமிழன்; டி ராஜேந்தர் சொன்ன வார்த்தை கண் கலங்கிய சரிகமப அரங்கம் தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப சீனியர் சீசன் 5 கோலாகலமாக தொடங்கியுள்ளது. இலங்கை தமிழர்களுக்கும் கள அமைத்துக்கொடுக்கும் மேடையாக சரிகமப நிகழ்ச்சி அமைந்துள்ளது.புலம்பெயர் தேசத்து தமிழர்கள் முதல் இலங்கையில் இருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டு தம் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் இம்முறை ஈழத்தமிழர்கள் மூவர் சரிகமப சீனியர் சீசன் 5 இல் கலந்துகொண்டுள்ளனர்.அந்தவகையில் அம்பாறை பிறதேசத்தில் இருந்து சபேசன், சுவிட்சர்லாந்தில் இருந்து புலம் பெயர் ஈழத்து மகன் பிரஷான், மற்றும் ஈழத்தின் பிரபல நாதஸ்வர வித்துவானின் மகளான தரங்கினி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். அதில் போட்டியாளர் பிரஷான், இலங்கை குடியுரிமை இல்லாமலும், சுவிஸ் குடியுரிமை இல்லாமலும் 30 நாள் விசாவில் இந்தியா வந்து சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியில் பாடியிருப்பது அனைவரது மனதையும் உருக வைத்திருக்கிறது.அவர் தான் முப்பது நாட்கள் மட்டுமே விசாவில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்ததாகவும் தனக்கு எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் தவிப்பதாகவும் கூறி இருந்தார். பிறந்து வளர்ந்த இலங்கையில் தனக்கு குடியுரிமை இல்லாமலும், தான் குடியேறிய சுவிஸ் குடியுரிமை இல்லாமலும் தான் கஷ்டப்படுவதாக பேசி இருந்தார். அதைக் கேட்டு டி ராஜேந்தர் அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.பிரஷான் குடும்பம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதியாக சுவிஷுக்கு சென்று இருக்கிறார்கள். இவருடைய வீட்டில் இவருக்கு மூன்று தம்பிகளும் இருக்கிறார்களாம். மொத்த குடும்பமும் இப்போது சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்தாலும் அங்கு இன்னும் குடியுரிமை கிடைக்கவில்லையாம். அதேபோல இலங்கையிலும் இவர்களுக்கு குடியுரிமை இல்லையாம். இதனால் தாங்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பதாக கூறியிருக்கிறார்.மேலும் பிரஷான் பேசும்போது, தனக்கு தெரிந்தது இசை மட்டும் தான். என்னுடைய மனதில் பல கஷ்டங்கள் இருக்கும் போது நான் பாடலை மட்டும் தான் என் துணையாக கொண்டிருக்கிறேன்.அந்த பாடலை நம்பி தான் நான் கடந்த வருடத்திலும் சரிகமப நிகழ்ச்சியின் ஆடிஷனில் கலந்து கொண்டேன். ஆனால் அதில் வெற்றி பெற்றாலும் என்னால் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. அதேபோல இந்த சீசனிலும் நான் செலக்ட் ஆனாலும் கூட என்னால் தொடர்ந்து கலந்து கொள்ள முடியாது, காரணம் நான் 30 நாள் விசாவில்தான் இந்தியாவிற்கு வந்திருக்கிறேன். வரும் ஜூன் மூன்றாம் தேதி இந்தியாவை விட்டு நான் போய் ஆக வேண்டும் என்று கண்கலங்க பேசி இருந்தார்.பிறகு "உயிரின் உயிரே ஒரு நாள் உறவே" என்ற பாடலை பாடியிருந்தார். இவருடைய பாடலை கேட்டு நடுவர்கள் மெய் மறந்து இருந்தனர். அது போல இவருடைய கதையை கேட்டு சிறப்பு விருந்தினராக வந்து டி ராஜேந்தர் கண்கலங்க பேசி இருந்தார். பிரஷானை கட்டி அணைத்து, "வாழ்க்கையுடைய நிலைமையை பார்க்கும்போது மனசு ரொம்ப பாரம் ஆயிடுச்சு. ஆனா ஒன்னு ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு நாழிகைக்கும் ஒவ்வொரு தினத்திற்கும் கடவுள் ஒரு கணக்கு வைத்து இருக்கிறான்.மதங்களை எல்லாம் மீறி நான் சொல்லுறேன் அந்தக் கணக்கை எல்லாம் மீறி நம்மால் எதுவும் பண்ண முடியாது. ஜூன் 3ஆம் தேதி ஊருக்கு புறப்பட்டு போகணும் என்று சொல்லி இருக்கிறாய் பிரஷான் நீ விமானத்தில் பறக்கலாம். ஆனால் இந்த சரிகமபவின் சங்கீத குடும்பம் உன்னை மறக்காது. எங்கள் நெஞ்சங்களில் எல்லாம் உண்மை சுமக்கிறோம் என்றும் வாழ்க பல்லாண்டு" என்று வாழ்த்துகிறார். உனக்குன்னு ஒரு அடையாளம் இல்லை என்று நினைக்காதே இனி இசை கலைஞர் என்பதுதான் உன்னுடைய அடையாளம். இந்த சரிகமப நிகழ்ச்சி உனக்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்றும் ராஜேந்தர் உட்பட நடுவர்களும் பிரஷான்னை வாழ்த்தி இருக்கிறார்கள்.