• May 22 2024

சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழர் அமோக வெற்றி! samugammedia

Tamil nila / Sep 1st 2023, 11:18 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதத்துக்கு மேலான  வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் நாட்டின் நிதி அமைச்சராகவும் துணை பாதுகாப்பு அமைச்சராகவும் ,துணை பிரதமராகவும் பதவி வகித்த நிலையில் தற்போது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு போட்டியாக  ஜனாதிபதி வேட்பாளராக இருவர் களமிறங்கிய நிலையில் இருவரும் 20 வீத வாக்குகளை கூட பெறாத நிலை காணப்பட்டது.

இவரது தாய் மற்றும் பேரனார் யாழ்ப்பாண ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 











சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழர் அமோக வெற்றி samugammedia யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதத்துக்கு மேலான  வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் நாட்டின் நிதி அமைச்சராகவும் துணை பாதுகாப்பு அமைச்சராகவும் ,துணை பிரதமராகவும் பதவி வகித்த நிலையில் தற்போது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் இவருக்கு போட்டியாக  ஜனாதிபதி வேட்பாளராக இருவர் களமிறங்கிய நிலையில் இருவரும் 20 வீத வாக்குகளை கூட பெறாத நிலை காணப்பட்டது.இவரது தாய் மற்றும் பேரனார் யாழ்ப்பாண ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement