• Jan 03 2025

பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் திடீரென உயிரிழந்த இலங்கை பெண்!

Chithra / Dec 27th 2024, 12:45 pm
image


கட்டாரின் தோஹாவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் திடீர் சுகயீனமடைந்த இலங்கையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கட்டார் ஏயர்வேஸ் விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,

ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து மருத்துவக் குழுக்கள் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க முற்பட்டது. 

எனினும் அவர் ஏற்கனவே விமானத்தில் உயிரிழந்துள்ளமை பின்னர் கண்டறியப்பட்டது.

பிரான்சில் தங்கியிருந்த 81 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எர்பிலில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அவரது மகனுக்குத் அறிவிக்க ஏற்பாடு செய்திருந்தது.

உயிரிழந்தவரின் சடலத்தை பிரான்ஸுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் திடீரென உயிரிழந்த இலங்கை பெண் கட்டாரின் தோஹாவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் திடீர் சுகயீனமடைந்த இலங்கையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.கட்டார் ஏயர்வேஸ் விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.இதையடுத்து மருத்துவக் குழுக்கள் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க முற்பட்டது. எனினும் அவர் ஏற்கனவே விமானத்தில் உயிரிழந்துள்ளமை பின்னர் கண்டறியப்பட்டது.பிரான்சில் தங்கியிருந்த 81 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.எர்பிலில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அவரது மகனுக்குத் அறிவிக்க ஏற்பாடு செய்திருந்தது.உயிரிழந்தவரின் சடலத்தை பிரான்ஸுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

Advertisement