• Jan 24 2025

கணவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் உயிரிழப்பு - இலங்கையில் நடந்த துயரம்

Chithra / Nov 29th 2024, 12:14 pm
image

 

முந்தல் 412 ஏக்கர் பகுதியில்  மின்சாரம் தாக்கியதில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று  இரவு (28) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் 55 மற்றும் 52 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்பதியர், வசித்துவந்த வீட்டுக்கு அருகில் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

அந்நிலையத்தில் மின்சார இணைப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுதை கணவர் திருத்த முற்பட்டபோது, அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. 

இந்நிலையில், கணவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் மின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். 

அதனையடுத்து, இருவரும் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், 

சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கணவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் உயிரிழப்பு - இலங்கையில் நடந்த துயரம்  முந்தல் 412 ஏக்கர் பகுதியில்  மின்சாரம் தாக்கியதில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச் சம்பவம் நேற்று  இரவு (28) இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர்கள் 55 மற்றும் 52 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தம்பதியர், வசித்துவந்த வீட்டுக்கு அருகில் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.அந்நிலையத்தில் மின்சார இணைப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுதை கணவர் திருத்த முற்பட்டபோது, அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இந்நிலையில், கணவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் மின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அதனையடுத்து, இருவரும் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement