• Sep 19 2024

கிரீம் பயன்படுத்தும் இலங்கைப் பெண்களுக்கு கடும் எச்சரிக்கை..! samugammedia

Chithra / May 20th 2023, 9:21 am
image

Advertisement

கொழும்பில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் உற்பத்தி செய்யப்பட்ட கிரீம்கள் விற்பனை செய்யும் இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை எல்.பி. பெரேரா மாவத்தையில் பெண்களுக்கான சருமத்தை பளபளக்கும் கிரீம்கள் எனக் கூறி நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தரமற்ற கிரீம்களை பொதி செய்யும் இடமொன்றை சுற்றிவளைத்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் அவசரச் சோதனைப் பிரிவு தெரிவித்துள்ளது.

தரமற்ற கிரீம்கள் பொதி செய்யப்படுவதாக பொலிஸ் விஷேட பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிரீம்கள் என கூறி நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கிரீம்கள் பொதி செய்யப்படுவது தெரியவந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சோதனையின் போது பணிப்பெண்கள் குழு கிரீம்களை பொதி செய்து கொண்டிருந்ததாக அதிகாரி கூறினார்.


குறித்த இடத்தில் உள்ள கிரீம் வகைகளுக்கு சீல் வைத்து அதன் உரிமையாளர் மற்றும் மற்றுமொருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பில் அண்மைய நாட்களாக தரமற்ற கிரீம்கள் சுற்றிவளைக்கப்படும் நிலையில் அவதானமாக இருக்குமாறு பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   

கிரீம் பயன்படுத்தும் இலங்கைப் பெண்களுக்கு கடும் எச்சரிக்கை. samugammedia கொழும்பில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் உற்பத்தி செய்யப்பட்ட கிரீம்கள் விற்பனை செய்யும் இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.கொட்டாஞ்சேனை எல்.பி. பெரேரா மாவத்தையில் பெண்களுக்கான சருமத்தை பளபளக்கும் கிரீம்கள் எனக் கூறி நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தரமற்ற கிரீம்களை பொதி செய்யும் இடமொன்றை சுற்றிவளைத்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் அவசரச் சோதனைப் பிரிவு தெரிவித்துள்ளது.தரமற்ற கிரீம்கள் பொதி செய்யப்படுவதாக பொலிஸ் விஷேட பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த சுற்றிவளைப்பின் போது பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிரீம்கள் என கூறி நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கிரீம்கள் பொதி செய்யப்படுவது தெரியவந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சோதனையின் போது பணிப்பெண்கள் குழு கிரீம்களை பொதி செய்து கொண்டிருந்ததாக அதிகாரி கூறினார்.குறித்த இடத்தில் உள்ள கிரீம் வகைகளுக்கு சீல் வைத்து அதன் உரிமையாளர் மற்றும் மற்றுமொருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.இதேவேளை, கொழும்பில் அண்மைய நாட்களாக தரமற்ற கிரீம்கள் சுற்றிவளைக்கப்படும் நிலையில் அவதானமாக இருக்குமாறு பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   

Advertisement

Advertisement

Advertisement