• Apr 27 2024

வெளிநாடு சென்று சிக்கித்தவிக்கும் இலங்கைப் பெண் தொழிலாளர்கள் - வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் samugammedia

Chithra / Jun 1st 2023, 3:31 pm
image

Advertisement

போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பட்டு வெளிநாடுகளில் கஷ்டப்படும் இலங்கையர்களை உடனடியாக தாயகத்துக்கு அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்து திருகோணமலையில் அமைந்துள்ள வெளிநாட்டு அமைச்சின் பிராந்திய கொன்சியுலர் அலுவலகத்தின் முன்னாள் இன்று வியாழக்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது இதில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபற்றியிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த பின்னர் வெளிநாட்டு அமைச்சின் திருகோணமலை பிராந்திய கொன்சியுலர் அலவலகத்திற்கு சென் பெண்கள் சிலர் அலுவலக கிளைத் தலைவர் கே.விக்னேஸ்வரானந்தன் அவர்களிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.

--


வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்றது.

பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளிற்கு சென்று சிக்குண்டுள்ள பெண்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், போலி முகவர்களை இல்லாது செய்தல், வேலைவாய்ப்புக்காக பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை வலியுறுத்தியும் குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

--

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்ற பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை (1) காலை 10 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஓமான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையில் இருந்து வேலை வாய்ப்புக்காக சென்று நாடு திரும்ப முடியாத நிலையில் சிக்கி தவிக்கும்    பெண் தொழிலாளர்களை   பாதுகாப்பாக நாட்டிற்கு திருப்பி கொண்டு வாருமாறும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மன்னாரில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனம் எழுதிய  பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டனர்.

இதன் போது  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் மகஜரும் வெளியிட்டனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மெசிடோ நிறுவன பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.



வெளிநாடு சென்று சிக்கித்தவிக்கும் இலங்கைப் பெண் தொழிலாளர்கள் - வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் samugammedia போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பட்டு வெளிநாடுகளில் கஷ்டப்படும் இலங்கையர்களை உடனடியாக தாயகத்துக்கு அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்து திருகோணமலையில் அமைந்துள்ள வெளிநாட்டு அமைச்சின் பிராந்திய கொன்சியுலர் அலுவலகத்தின் முன்னாள் இன்று வியாழக்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது இதில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபற்றியிருந்தனர்.ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த பின்னர் வெளிநாட்டு அமைச்சின் திருகோணமலை பிராந்திய கொன்சியுலர் அலவலகத்திற்கு சென் பெண்கள் சிலர் அலுவலக கிளைத் தலைவர் கே.விக்னேஸ்வரானந்தன் அவர்களிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.--வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்றது.பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளிற்கு சென்று சிக்குண்டுள்ள பெண்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், போலி முகவர்களை இல்லாது செய்தல், வேலைவாய்ப்புக்காக பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை வலியுறுத்தியும் குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.--மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்ற பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை (1) காலை 10 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.ஓமான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையில் இருந்து வேலை வாய்ப்புக்காக சென்று நாடு திரும்ப முடியாத நிலையில் சிக்கி தவிக்கும்    பெண் தொழிலாளர்களை   பாதுகாப்பாக நாட்டிற்கு திருப்பி கொண்டு வாருமாறும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மன்னாரில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனம் எழுதிய  பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டனர்.இதன் போது  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் மகஜரும் வெளியிட்டனர்.குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மெசிடோ நிறுவன பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement