• May 02 2024

இலங்கை இளைஞர்களுக்கு ஆபத்து: திட்டமிட்டு களமிறக்கப்படும் போலி சிங்கள துறவிகள்! புலனாய்வு பிரிவு எச்சரிக்கை

Chithra / Sep 3rd 2023, 9:02 am
image

Advertisement

இலங்கையில் 18 – 20 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து காவி உடை அணிவித்து அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் திட்டமொன்று அமுலில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் அரச புலனாய்வு பிரிவு தகவல் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, துறவு வாழ்க்கைக்கு அனுமதிக்கப்படும் இளைஞர்கள் போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் கவசமாகப் பயன்படுத்தப்படுவதாக புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுவரை சுமார் 500 பேர் பயிற்சி பெற்று துறவிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரச புலனாய்வு பிரிவினர் இரகசிய அறிக்கையில் அரசாங்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் அரசியல் கட்சி இருப்பதாக புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலர் தமது அரசியல் கருத்துக்களை பரப்பும் வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் உரிய திணைக்களங்களின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக அரச உள்ளகமட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கை இளைஞர்களுக்கு ஆபத்து: திட்டமிட்டு களமிறக்கப்படும் போலி சிங்கள துறவிகள் புலனாய்வு பிரிவு எச்சரிக்கை இலங்கையில் 18 – 20 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து காவி உடை அணிவித்து அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் திட்டமொன்று அமுலில் உள்ளதாக தெரியவந்துள்ளது.இது தொடர்பில் அரச புலனாய்வு பிரிவு தகவல் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதற்கமைய, துறவு வாழ்க்கைக்கு அனுமதிக்கப்படும் இளைஞர்கள் போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் கவசமாகப் பயன்படுத்தப்படுவதாக புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதுவரை சுமார் 500 பேர் பயிற்சி பெற்று துறவிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரச புலனாய்வு பிரிவினர் இரகசிய அறிக்கையில் அரசாங்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.இதன் பின்னணியில் அரசியல் கட்சி இருப்பதாக புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன் மூலம் அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலர் தமது அரசியல் கருத்துக்களை பரப்பும் வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது.இவ்விடயம் தொடர்பில் உரிய திணைக்களங்களின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக அரச உள்ளகமட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement