• Apr 26 2024

இலங்கையின் மிகப்பெரிய கிரேன் அம்பாந்தோட்டையில்! எரிபொருளைச் சேமிக்க புதிய திட்டம் SamugamMedia

Chithra / Mar 19th 2023, 9:44 pm
image

Advertisement

இலங்கையில் மிகப்பெரிய கொள்ளளவு கொண்ட கிரேன் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளது

கடந்த வாரம், இலங்கையில் மிகப்பெரிய கொள்ளளவு கொண்ட கிரேன் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளது. 


750 தொன் பாரம்தூக்கும் திறன் கொண்ட இந்த கிரேன், முதலில் மன்னாரில் ஹிருராஸ் காற்றாலை மின் திட்டத்திற்கு பயன்படுத்தப்படவுள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தி நிறுவனமான WindForce PLC, மன்னாரில் 15MW ஹிருராஸ் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் வவுணதீவில் 10MW சூரிய மின் நிலையத்தின் ஆரம்ப நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளது.


இது இலங்கையின் தேசிய மின் கட்டமைப்பிற்கு 25 மெகாவாட் உற்பத்தியை சேர்க்கும், மேலும் சமமான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு வருடாந்தம் பயன்படுத்தப்படும் 10 மில்லியன் லீற்றருக்கும் அதிகமான எரிபொருளைச் சேமிக்கும்.

10 மெகாவாட் மற்றும் 5 மெகாவாட் திறன் கொண்ட உத்தேச காற்றாலை மின் நிலையங்கள் இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது


இலங்கையின் மிகப்பெரிய கிரேன் அம்பாந்தோட்டையில் எரிபொருளைச் சேமிக்க புதிய திட்டம் SamugamMedia இலங்கையில் மிகப்பெரிய கொள்ளளவு கொண்ட கிரேன் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளதுகடந்த வாரம், இலங்கையில் மிகப்பெரிய கொள்ளளவு கொண்ட கிரேன் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளது. 750 தொன் பாரம்தூக்கும் திறன் கொண்ட இந்த கிரேன், முதலில் மன்னாரில் ஹிருராஸ் காற்றாலை மின் திட்டத்திற்கு பயன்படுத்தப்படவுள்ளது.இலங்கையின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தி நிறுவனமான WindForce PLC, மன்னாரில் 15MW ஹிருராஸ் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் வவுணதீவில் 10MW சூரிய மின் நிலையத்தின் ஆரம்ப நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளது.இது இலங்கையின் தேசிய மின் கட்டமைப்பிற்கு 25 மெகாவாட் உற்பத்தியை சேர்க்கும், மேலும் சமமான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு வருடாந்தம் பயன்படுத்தப்படும் 10 மில்லியன் லீற்றருக்கும் அதிகமான எரிபொருளைச் சேமிக்கும்.10 மெகாவாட் மற்றும் 5 மெகாவாட் திறன் கொண்ட உத்தேச காற்றாலை மின் நிலையங்கள் இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

Advertisement

Advertisement

Advertisement