• Jan 24 2025

அரச வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள் - சுட்டிக்காட்டிய இலங்கையின் முதல் மாற்றுத்திறனாளி எம்.பி.

Chithra / Dec 6th 2024, 12:39 pm
image


மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் சொற் பிரயோகங்களை பாராளுமன்றில் பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என இலங்கையின் முதல் மாற்றுத்திறனாளியான நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டிலுள்ள 17 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் சார்பில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கவுள்ளேன்.

பலர் மாற்றுத்திறனாளிகள் பாராளுமன்றிற்கு வந்து என்ன செய்ய போகின்றனர் என்று கேட்கின்றார்கள். அதனை சவாலாக ஏற்று எனது பணியை தொடர்வேன்.

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் சொற் பிரயோகங்களை பாராளுமன்றில் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.

மாற்றுத்திறனாளிகள் அரச வேலைவாய்ப்பில் புறக்கணிக்ப்படுகின்றனர். வேலைவவாய்ப்பில் 3 சதவீத மாற்றுதிறனாளிகள் உள்வாங்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் ஐ.நாவில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.

மாற்று திறனாளிகளுக்கான பொருட்களுக்கு வரிக்குறைப்பு வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

அரச வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள் - சுட்டிக்காட்டிய இலங்கையின் முதல் மாற்றுத்திறனாளி எம்.பி. மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் சொற் பிரயோகங்களை பாராளுமன்றில் பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என இலங்கையின் முதல் மாற்றுத்திறனாளியான நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த தெரிவித்தார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டிலுள்ள 17 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் சார்பில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கவுள்ளேன்.பலர் மாற்றுத்திறனாளிகள் பாராளுமன்றிற்கு வந்து என்ன செய்ய போகின்றனர் என்று கேட்கின்றார்கள். அதனை சவாலாக ஏற்று எனது பணியை தொடர்வேன்.மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் சொற் பிரயோகங்களை பாராளுமன்றில் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.மாற்றுத்திறனாளிகள் அரச வேலைவாய்ப்பில் புறக்கணிக்ப்படுகின்றனர். வேலைவவாய்ப்பில் 3 சதவீத மாற்றுதிறனாளிகள் உள்வாங்கப்பட வேண்டும்.மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் ஐ.நாவில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.மாற்று திறனாளிகளுக்கான பொருட்களுக்கு வரிக்குறைப்பு வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement