• May 19 2024

இலங்கையின் அடுத்த தேர்தல் சித்தாந்தங்களின் போராக இருக்கும்..! ஹர்ஷ டி சில்வா samugammedia

Chithra / Jun 28th 2023, 8:27 am
image

Advertisement

இலங்கையின் அடுத்த தேர்தல், சித்தாந்தங்களின் போராக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் நேர்காணலின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 

சீர்திருத்தங்களை சீர்குலைக்காத, அரசியலை விட தேசிய நலன்களுக்கு முன்னுரிமை வழங்கும் கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி வாக்காளர்களிடம் செல்லும். 

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில், இலங்கை அரசாங்கம் மற்றும் மத்திய வங்கியின் முன்மொழிவுகள் கிடைத்தவுடன் அவற்றை பரிசீலிக்க கட்சி தயாராக உள்ளது.

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலும், அது முற்றிலும் இன்றியமையாததாக இருந்தால், சகிப்புத்தன்மையுடன் அதை நிர்வகிக்க முடியும். 

இந்தநிலையில் இன்னும் பகிரங்கப்படுத்தப்படாத மறுசீரமைப்புத் திட்டம், ஜூலை முதலாம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையின் அடுத்த தேர்தல் சித்தாந்தங்களின் போராக இருக்கும். ஹர்ஷ டி சில்வா samugammedia இலங்கையின் அடுத்த தேர்தல், சித்தாந்தங்களின் போராக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றின் நேர்காணலின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், சீர்திருத்தங்களை சீர்குலைக்காத, அரசியலை விட தேசிய நலன்களுக்கு முன்னுரிமை வழங்கும் கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி வாக்காளர்களிடம் செல்லும். உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில், இலங்கை அரசாங்கம் மற்றும் மத்திய வங்கியின் முன்மொழிவுகள் கிடைத்தவுடன் அவற்றை பரிசீலிக்க கட்சி தயாராக உள்ளது.உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலும், அது முற்றிலும் இன்றியமையாததாக இருந்தால், சகிப்புத்தன்மையுடன் அதை நிர்வகிக்க முடியும். இந்தநிலையில் இன்னும் பகிரங்கப்படுத்தப்படாத மறுசீரமைப்புத் திட்டம், ஜூலை முதலாம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement