கிளீன் ஸ்ரீ லங்கா என்பது சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவது மட்டுமன்றி, சீரழிந்துள்ள மனித சமூகத்தையும் தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் எனவும், இதன் மூலம் பொது மக்களின் மத்தியில் நற்பண்புகளையும் வளர்க்க முடியும் எனவும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் ச்சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாண மத்திய நூலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம்(06) நடைபெற்ற ரத்ன ஸ்ரீ அவர்களுடன் மீண்டும் இலக்கியம் வாசிப்போம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
மாகாண ஆளுனர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் .
இலக்கியம் படிக்க வேண்டும், அப்போதுதான் நமது மனதில் வளர்ச்சி ஏற்படும். அதன் மூலம் இந்த சமுதாயம் மிகவும் நல்லதாக மாறும். அதனால்தான் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு நான் அதிக ஆதரவைத் தருகிறேன்.
குறிப்பாக இலக்கியத்தை நோக்கி சிறு குழந்தைகளை வழிநடத்த வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டமும் அப்படித்தான். இது சீரழிந்த மனித சமுதாயத்தை தூய்மைப்படுத்தும் திட்டம். நல்ல சமுதாயத்தில் மூலம் நற்பண்புகளை மீண்டும் கொண்டு வர வேண்டும். அந்த நற்பண்புகளை அடைய இலக்கியத்தையும் கலையையும் இணைக்க வேண்டும்.
கிளீன் ஸ்ரீ லங்கா என்பது சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தும் பணி மட்டுமல்ல, சீரழிந்த மனித சமுதாயத்தையும் தூய்மைப்படுத்தும் பணியாகவும் இருக்கிறது. அதனால் இலக்கியம்இ கலை நிகழ்ச்சிகளும் நடாத்த வேண்டும். அதற்கான முழு ஆதரவையும் ஆளுனர் என்ற ரீதியில் நான் பெற்று கொடுப்பேன்.
இந்நிகழ்வில் தேசிய நூலக சபையின் தலைவர் ரத்ன ஸ்ரீ விஜேசங்ஹ கலந்து கொண்டார்.
சீரழிந்த மனித சமுதாயத்தை தூய்மைப்படுத்தும் திட்டமே கிளீன் ஸ்ரீ லங்கா சப்ரகமுவ மாகாண ஆளுநர் தெரிவிப்பு கிளீன் ஸ்ரீ லங்கா என்பது சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவது மட்டுமன்றி, சீரழிந்துள்ள மனித சமூகத்தையும் தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் எனவும், இதன் மூலம் பொது மக்களின் மத்தியில் நற்பண்புகளையும் வளர்க்க முடியும் எனவும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் ச்சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்துள்ளார்.சப்ரகமுவ மாகாண மத்திய நூலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம்(06) நடைபெற்ற ரத்ன ஸ்ரீ அவர்களுடன் மீண்டும் இலக்கியம் வாசிப்போம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.மாகாண ஆளுனர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் .இலக்கியம் படிக்க வேண்டும், அப்போதுதான் நமது மனதில் வளர்ச்சி ஏற்படும். அதன் மூலம் இந்த சமுதாயம் மிகவும் நல்லதாக மாறும். அதனால்தான் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு நான் அதிக ஆதரவைத் தருகிறேன். குறிப்பாக இலக்கியத்தை நோக்கி சிறு குழந்தைகளை வழிநடத்த வேண்டும்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டமும் அப்படித்தான். இது சீரழிந்த மனித சமுதாயத்தை தூய்மைப்படுத்தும் திட்டம். நல்ல சமுதாயத்தில் மூலம் நற்பண்புகளை மீண்டும் கொண்டு வர வேண்டும். அந்த நற்பண்புகளை அடைய இலக்கியத்தையும் கலையையும் இணைக்க வேண்டும்.கிளீன் ஸ்ரீ லங்கா என்பது சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தும் பணி மட்டுமல்ல, சீரழிந்த மனித சமுதாயத்தையும் தூய்மைப்படுத்தும் பணியாகவும் இருக்கிறது. அதனால் இலக்கியம்இ கலை நிகழ்ச்சிகளும் நடாத்த வேண்டும். அதற்கான முழு ஆதரவையும் ஆளுனர் என்ற ரீதியில் நான் பெற்று கொடுப்பேன்.இந்நிகழ்வில் தேசிய நூலக சபையின் தலைவர் ரத்ன ஸ்ரீ விஜேசங்ஹ கலந்து கொண்டார்.