மட்டக்களப்பில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் சாணக்கியன் எம்.பி கருத்துத் தெரிவித்ததாவது கடந்த ஆட்சி காலத்தில் ஜீவன் தொண்டமானின் நடவடிக்கையால் நீர் வழங்கல் இடம்பெற்றது.தற்போது போது அதுவும் தடைபட்டுள்ளது.குடிநீர் வழங்கலென்பது அத்தியவசியமானதொரு விடயம் .ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே குடிநீர் பெரும் பிரச்சனையாக காணப்படுகின்றது.
புதிதாக நீர்ப்பாசனத்திற்கு நீர்வழங்கல் அமைச்சினுடைய தரத்தை உயர்த்தும் வரைக்கும் மடடக்களப்பு மக்கள் காத்துக்கொண்டிருக்க முடியாது. உடனடியாக இருக்கிற வளத்தைக் கொண்டு இணைப்புக்களை செய்தால் உடனடியாக தண்ணீர் வழங்க முடியும். 3 நாட்களுக்கு ஒருதடைவையேனும் நீர் விநியோகத்தை மேற்கொள்ளுங்கள்
அடுத்த சில வாரங்களுக்குள் எத்தனை இணைப்புக்களை தரமுடியும்? மட்டக்களப்பு மாவட்டத்திற்கு குடிதண்ணீருக்கு 10,15 கிலோ மீற்றர் தூரம் நடக்க வேண்டும் இது மிகவும் கஸ்ரமான விடயம்.
எத்தனை பைப் லைன் இருக்கிறது அதனை உடனடியாக வழங்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவருடைய கேள்விக்கு அமைச்சர், மண்டூர் நீர்வழங்கல் திட்டத்தின் மூலம் பிரதேச செயலக மட்ட அடிப்படையில் ஒட்டுமொத்த பிரதேசத்திற்கும் நீர்வழங்குவதற்காக வெள்ளாவெளிப் பிரதேசத்தில் நீர்க்குழாய்க் கூடத்தை நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் மட்டக்களப்பிலே 13 பிரிவுகள் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
மட்டக்களப்பில் நிலவும் குடிநீர் பிரச்சனை - சாணக்கியன் எம்.பியின் கேள்வி மட்டக்களப்பில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் சாணக்கியன் எம்.பி கருத்துத் தெரிவித்ததாவது கடந்த ஆட்சி காலத்தில் ஜீவன் தொண்டமானின் நடவடிக்கையால் நீர் வழங்கல் இடம்பெற்றது.தற்போது போது அதுவும் தடைபட்டுள்ளது.குடிநீர் வழங்கலென்பது அத்தியவசியமானதொரு விடயம் .ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே குடிநீர் பெரும் பிரச்சனையாக காணப்படுகின்றது.புதிதாக நீர்ப்பாசனத்திற்கு நீர்வழங்கல் அமைச்சினுடைய தரத்தை உயர்த்தும் வரைக்கும் மடடக்களப்பு மக்கள் காத்துக்கொண்டிருக்க முடியாது. உடனடியாக இருக்கிற வளத்தைக் கொண்டு இணைப்புக்களை செய்தால் உடனடியாக தண்ணீர் வழங்க முடியும். 3 நாட்களுக்கு ஒருதடைவையேனும் நீர் விநியோகத்தை மேற்கொள்ளுங்கள்அடுத்த சில வாரங்களுக்குள் எத்தனை இணைப்புக்களை தரமுடியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு குடிதண்ணீருக்கு 10,15 கிலோ மீற்றர் தூரம் நடக்க வேண்டும் இது மிகவும் கஸ்ரமான விடயம். எத்தனை பைப் லைன் இருக்கிறது அதனை உடனடியாக வழங்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். இவருடைய கேள்விக்கு அமைச்சர், மண்டூர் நீர்வழங்கல் திட்டத்தின் மூலம் பிரதேச செயலக மட்ட அடிப்படையில் ஒட்டுமொத்த பிரதேசத்திற்கும் நீர்வழங்குவதற்காக வெள்ளாவெளிப் பிரதேசத்தில் நீர்க்குழாய்க் கூடத்தை நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் மட்டக்களப்பிலே 13 பிரிவுகள் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்