• Nov 15 2024

பெண் வணிக ஆய்வாளரை வன்கொடுமை செய்து நாட்டை விட்டுஓடிய இலங்கையின் முன்னணி நிறுவனமொன்றின் தலைவர்!

Chithra / Jul 15th 2024, 1:35 pm
image


பெண் வணிக ஆய்வாளர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கையின் முன்னணி நிறுவனமொன்றின் தலைவர் கைதுசெய்யப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் வெளியூரிலிருந்து நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் முன்னணி நிறுவனமொன்றின் தலைவரான சந்தேக நபருக்கு கோட்டை நீதவானால் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சந்தேக நபர்  இருக்கும் இடம் தொடர்பில் எந்த தகவலும் இல்லை எனவும், பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் அவர் நாட்டிற்கு வருகை தந்தவுடன் கைதுசெய்யப்படுவார் எனவும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 7ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சந்தேக நபர் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கொழும்பைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேக நபர் வெளிநாட்டில் இருந்தபோது அவரின் வணிக ஆய்வாளராக குறித்த பெண் ஒரு மாத காலமாக இணையம் ஊடாக பணிபுரிந்துள்ளார். 

இந்நிலையில், சந்தேக நபர்  கடந்த மே மாதம் 6 ஆம் திகதி நாடு திரும்பிய நிலையில், அவர் குறித்த பெண்ணை 7 ஆம் திகதி சந்திக்க விரும்புவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, குறிப்பிட்ட இடத்தில் பெண்ணை சந்தித்த சந்தேக நபர்  அவரை  பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்போது, கோட்டை நீதவானுக்கு அறிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் நடந்த அன்றே சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இன்னும் நாடு திரும்பவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண் வணிக ஆய்வாளரை வன்கொடுமை செய்து நாட்டை விட்டுஓடிய இலங்கையின் முன்னணி நிறுவனமொன்றின் தலைவர் பெண் வணிக ஆய்வாளர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கையின் முன்னணி நிறுவனமொன்றின் தலைவர் கைதுசெய்யப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் வெளியூரிலிருந்து நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் முன்னணி நிறுவனமொன்றின் தலைவரான சந்தேக நபருக்கு கோட்டை நீதவானால் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.ஆனால் சந்தேக நபர்  இருக்கும் இடம் தொடர்பில் எந்த தகவலும் இல்லை எனவும், பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் அவர் நாட்டிற்கு வருகை தந்தவுடன் கைதுசெய்யப்படுவார் எனவும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த மே மாதம் 7ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சந்தேக நபர் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கொழும்பைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.சந்தேக நபர் வெளிநாட்டில் இருந்தபோது அவரின் வணிக ஆய்வாளராக குறித்த பெண் ஒரு மாத காலமாக இணையம் ஊடாக பணிபுரிந்துள்ளார். இந்நிலையில், சந்தேக நபர்  கடந்த மே மாதம் 6 ஆம் திகதி நாடு திரும்பிய நிலையில், அவர் குறித்த பெண்ணை 7 ஆம் திகதி சந்திக்க விரும்புவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து, குறிப்பிட்ட இடத்தில் பெண்ணை சந்தித்த சந்தேக நபர்  அவரை  பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.பாதிக்கப்பட்ட பெண் கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்போது, கோட்டை நீதவானுக்கு அறிவிக்கபட்டுள்ளது.இந்நிலையில், சம்பவம் நடந்த அன்றே சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இன்னும் நாடு திரும்பவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement