• Jan 18 2025

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தல் அறிமுகம்!

Chithra / Jan 10th 2025, 7:55 am
image


தற்போதைய அரசாங்கம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தலை அறிமுகப்படுத்தும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.

தரமற்ற வெளிநாட்டு பொருட்கள் மற்றும் சேவைகள் இந்த நாட்டிற்கு கொண்டுவரப்படுவதனால், உள்நாட்டு தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

திறந்த பொருளாதாரத்தின் ஊடாக நாட்டிற்கு பொருத்தமான மற்றும் பொருத்தமற்ற பல பொருட்கள், சேவைகள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் தரப்படுத்தலைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உள்நாட்டு தொழில்முனைவோரைப் பாதுகாக்க ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தல் அறிமுகம் தற்போதைய அரசாங்கம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தலை அறிமுகப்படுத்தும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.தரமற்ற வெளிநாட்டு பொருட்கள் மற்றும் சேவைகள் இந்த நாட்டிற்கு கொண்டுவரப்படுவதனால், உள்நாட்டு தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.திறந்த பொருளாதாரத்தின் ஊடாக நாட்டிற்கு பொருத்தமான மற்றும் பொருத்தமற்ற பல பொருட்கள், சேவைகள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.தற்போதைய அரசாங்கம் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் தரப்படுத்தலைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உள்நாட்டு தொழில்முனைவோரைப் பாதுகாக்க ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now