• Jun 16 2024

ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு ஒற்றையாட்சி வேண்டாமென்று கூறுவது சுத்த ஏமாற்றுத்தனம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tamil nila / May 22nd 2024, 9:01 pm
image

Advertisement

தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்ட சமூகமல்ல தமிழ் மக்களின் பெயரால் மேற் கொள்ளப்பட்ட தவறான  வழிமுறைகள் தான் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


மேலும், ஈ.பி.டி.பியின் நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளே தற்போது அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர்,  கட்சியின் வேலைத் திட்டங்களும் கருத்துக்களும் பரந்துபட்டளவில் மக்கள் மத்தியில் செல்லும் வகையில், கட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.



சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர்கள் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிடுள்ளார். இச்சந்திப்பில் ஈ.பி.டி.பி. கட்சியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கி.பி ஆகியோரும் உடனிருந்தனர்.

இதன் போது அமைச்சர் மேலும் கூறுகையில்,,



சமஷ்ரி தான் வேண்டும், ஒற்றை ஆட்சியின் கீழ் தீர்வை காணமுடியாது என குழப்பங்களை ஏற்படுத்தித்திரியும் தரப்பினர், இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் ஒற்றையாட்சி முறைமையை ஏற்றுத்தான்  தேர்தலில் போட்டியிட்டு  நாடாளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.

அதே போன்று இலங்கையில் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் உள்ள உள்ளூராட்சி மன்றமானாலும் சரி மாகாண சபையானாலும் சரி ஒற்றையாட்சிக் கட்டமைப்பிலேயே நடைபெறுகின்றது. 

இத்தனையிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று இலங்கையின் இறைமையை பாதுகாப்பேன் என உறுதிப்பிரமாணம் எடுத்து அதனூடான சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொண்டு, இன்று ஒற்றையைாட்சி கட்டமைப்பு உள்ள ஒரு நாட்டின் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம் என ஒருபுறமும் பொதுவேட்பாளரை போட்டியிடச் செய்வோம் என இன்னொருபுறமும் கூறிவருவது வேடிக்கையாக உள்ளது.

உண்மையில்,  அன்று ஈ.பி.டி.பியின் அதீத வளர்ச்சியை கண்டு அஞ்சியே புலிகள் தலைமை தமிழ் தேசியக் கூட்டமைப்பை அதாவது புலிகளின் அச்சுறுத்தல்களால்  உயிருக்கு பயந்து ஓடி ஒழித்திருந்தவர்களை எல்லாம் அழைத்து ஒரு மூட்டையாக கட்டிய புலிகள் அமைப்பின் தலைமை தமது அரசியல் செயற்பாடுகளுக்கான கைப்பாவைகளாக இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை செயற்படுத்தியிருந்தனர்.

ஆனாலும் இந்த கூட்டமைப்பின் அரசியல் திட்டத்துக்கு மக்கள் அதிகளவில் செவிசாய்க்காது ஈ.பிடி.பியின் பக்கம் சென்றால் தான் தமது தேவைகளை அடையலாம் என்று மக்கள் அவர்களை நோக்கி செல்வதை தடுக்கமுடியாதவர்களாக,  எம்மீது அவதூறுகள், சேறுபூசல்கள் என்ற தாக்கத்தை ஏற்டுபடுத்தவல்ல பிரசாரப் பாணியை புலிகள் கையிலெடுத்திருந்தனர். 

ஆனால் எம் மீதான சேறுபூசல்களை செய்து அன்று அரசியல் இலாபங்களை புலிகள் தரப்பினர் பெற்றிருந்தாலும் தமிழ் மக்களை வெற்றியாளர்களாக்குவதில் மட்டுமல்லாது தம்மை பாதுகாப்பதிலும் தோல்விகண்டுவிட்டனர்.

மாறாக எமது கொள்கையும் தூரநோக்கடைய பொறிமுறையும் தேசிய நல்லிணக்கமும்    வெற்றிகண்டு வருகின்றது. நாம் முன்னெடுத்த வழிமுறை சரியானதென்பதால்தான் இன்றும் நாம் களத்தில் இருந்து மக்களுக்கான சேவைகளை செய்யமுடிகின்றது. 

மேலும் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் ஒவ்வோரு கதைகளை கூறி மக்களை குழப்புவதிலும் மக்கள் நலன்களிலிருப்பதாக தம்மை காட்டி மக்களது வாக்குகளை அபகரித்து தமது இருப்புக்களை பலப்படுத்திக் கொள்வதுமே இந்த தேசிய சுயநலம்பிடித்த தமிழ் தரப்பினரது செயற்பாடாக இருந்து வருகின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு ஒற்றையாட்சி வேண்டாமென்று கூறுவது சுத்த ஏமாற்றுத்தனம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்ட சமூகமல்ல தமிழ் மக்களின் பெயரால் மேற் கொள்ளப்பட்ட தவறான  வழிமுறைகள் தான் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.மேலும், ஈ.பி.டி.பியின் நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளே தற்போது அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர்,  கட்சியின் வேலைத் திட்டங்களும் கருத்துக்களும் பரந்துபட்டளவில் மக்கள் மத்தியில் செல்லும் வகையில், கட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர்கள் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிடுள்ளார். இச்சந்திப்பில் ஈ.பி.டி.பி. கட்சியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கி.பி ஆகியோரும் உடனிருந்தனர்.இதன் போது அமைச்சர் மேலும் கூறுகையில்,,சமஷ்ரி தான் வேண்டும், ஒற்றை ஆட்சியின் கீழ் தீர்வை காணமுடியாது என குழப்பங்களை ஏற்படுத்தித்திரியும் தரப்பினர், இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் ஒற்றையாட்சி முறைமையை ஏற்றுத்தான்  தேர்தலில் போட்டியிட்டு  நாடாளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.அதே போன்று இலங்கையில் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் உள்ள உள்ளூராட்சி மன்றமானாலும் சரி மாகாண சபையானாலும் சரி ஒற்றையாட்சிக் கட்டமைப்பிலேயே நடைபெறுகின்றது. இத்தனையிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று இலங்கையின் இறைமையை பாதுகாப்பேன் என உறுதிப்பிரமாணம் எடுத்து அதனூடான சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொண்டு, இன்று ஒற்றையைாட்சி கட்டமைப்பு உள்ள ஒரு நாட்டின் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம் என ஒருபுறமும் பொதுவேட்பாளரை போட்டியிடச் செய்வோம் என இன்னொருபுறமும் கூறிவருவது வேடிக்கையாக உள்ளது.உண்மையில்,  அன்று ஈ.பி.டி.பியின் அதீத வளர்ச்சியை கண்டு அஞ்சியே புலிகள் தலைமை தமிழ் தேசியக் கூட்டமைப்பை அதாவது புலிகளின் அச்சுறுத்தல்களால்  உயிருக்கு பயந்து ஓடி ஒழித்திருந்தவர்களை எல்லாம் அழைத்து ஒரு மூட்டையாக கட்டிய புலிகள் அமைப்பின் தலைமை தமது அரசியல் செயற்பாடுகளுக்கான கைப்பாவைகளாக இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை செயற்படுத்தியிருந்தனர்.ஆனாலும் இந்த கூட்டமைப்பின் அரசியல் திட்டத்துக்கு மக்கள் அதிகளவில் செவிசாய்க்காது ஈ.பிடி.பியின் பக்கம் சென்றால் தான் தமது தேவைகளை அடையலாம் என்று மக்கள் அவர்களை நோக்கி செல்வதை தடுக்கமுடியாதவர்களாக,  எம்மீது அவதூறுகள், சேறுபூசல்கள் என்ற தாக்கத்தை ஏற்டுபடுத்தவல்ல பிரசாரப் பாணியை புலிகள் கையிலெடுத்திருந்தனர். ஆனால் எம் மீதான சேறுபூசல்களை செய்து அன்று அரசியல் இலாபங்களை புலிகள் தரப்பினர் பெற்றிருந்தாலும் தமிழ் மக்களை வெற்றியாளர்களாக்குவதில் மட்டுமல்லாது தம்மை பாதுகாப்பதிலும் தோல்விகண்டுவிட்டனர்.மாறாக எமது கொள்கையும் தூரநோக்கடைய பொறிமுறையும் தேசிய நல்லிணக்கமும்    வெற்றிகண்டு வருகின்றது. நாம் முன்னெடுத்த வழிமுறை சரியானதென்பதால்தான் இன்றும் நாம் களத்தில் இருந்து மக்களுக்கான சேவைகளை செய்யமுடிகின்றது. மேலும் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் ஒவ்வோரு கதைகளை கூறி மக்களை குழப்புவதிலும் மக்கள் நலன்களிலிருப்பதாக தம்மை காட்டி மக்களது வாக்குகளை அபகரித்து தமது இருப்புக்களை பலப்படுத்திக் கொள்வதுமே இந்த தேசிய சுயநலம்பிடித்த தமிழ் தரப்பினரது செயற்பாடாக இருந்து வருகின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement