• May 17 2024

இன்று கரையை கடக்கும் மண்டோஸ் புயல்:3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Sharmi / Dec 9th 2022, 12:16 pm
image

Advertisement

மண்டோஸ் புயல் கரையை நெருங்கி வருவதால், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு  இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 9) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 9 மற்றும் 10-ஆம் திகதிகளில் தலைநகர் சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது  இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மகாபலிபுரத்திற்கு அருகில் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று(08) ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.டிசம்பர் 10(சனிக்கிழமை) தர்மபுரி,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை,வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய நகரங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வானிலை காரணமாக டிசம்பர் 9 மற்றும் 10-ஆம் திகதிகளில் தமிழகத்தில் பல்வேரு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த  காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 8 முதல் 10-ம் திகதி  வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா மற்றும் வட இலங்கைக் கடலோரப் பகுதிகளில் டிசம்பர் 8-ஆம் திகதி முதல் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், டிசம்பர் 9 மற்றும் 10 திகதிகளில் காற்றின் தீவிரம் மணிக்கு 70-90 கி.மீ.வரை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 9 மற்றும் 10-ம் திகதிகளில் காற்று மற்றும் மழை கடுமையாக இருக்கும் என்பதால், இந்த மாண்டஸ் புயல் தமிழகத்தை மோசமாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும்  மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பி.செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று கரையை கடக்கும் மண்டோஸ் புயல்:3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை மண்டோஸ் புயல் கரையை நெருங்கி வருவதால், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு  இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 9) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.டிசம்பர் 9 மற்றும் 10-ஆம் திகதிகளில் தலைநகர் சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது  இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மகாபலிபுரத்திற்கு அருகில் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று(08) ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று (வெள்ளிக்கிழமை) திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.டிசம்பர் 10(சனிக்கிழமை) தர்மபுரி,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை,வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய நகரங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த வானிலை காரணமாக டிசம்பர் 9 மற்றும் 10-ஆம் திகதிகளில் தமிழகத்தில் பல்வேரு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.குறித்த  காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 8 முதல் 10-ம் திகதி  வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா மற்றும் வட இலங்கைக் கடலோரப் பகுதிகளில் டிசம்பர் 8-ஆம் திகதி முதல் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், டிசம்பர் 9 மற்றும் 10 திகதிகளில் காற்றின் தீவிரம் மணிக்கு 70-90 கி.மீ.வரை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.டிசம்பர் 9 மற்றும் 10-ம் திகதிகளில் காற்று மற்றும் மழை கடுமையாக இருக்கும் என்பதால், இந்த மாண்டஸ் புயல் தமிழகத்தை மோசமாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும்  மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பி.செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement