• Oct 26 2024

மூடப்பட்ட சிறைச்சாலைக்குள் இருந்து கேட்கும் விசித்திரமான சத்தங்கள்! samugammedia

Tamil nila / Oct 6th 2023, 7:05 am
image

Advertisement

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிலடெல்பியா நகரில் உள்ள பழமையான சிறைச்சாலை மூடப்பட்டுள்ளது.

கடந்த 1829 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த சிறைச்சாலையில், கடந்த 1971 ஆம் ஆண்டு வரை நடவடிக்கைகள் தொடர்ந்தன.

ஆரம்பத்தில் இந்த சிறைச்சாலை 250 கைதிகளுக்காக மட்டுமே நிர்மாணிக்கப்பட்டது.

1900 ஆம் ஆண்டில் காசநோய் போன்ற கொடிய நோய்கள் இந்த சிறைச்சாலையில் பரவியது. இதனால் பல கைதிகள் உயிரிழந்தனர்

இந்த நிலையில் கடந்த 1961 ஆம் ஆண்டு சிறையில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறைச்சாலையின் 800க்கும் மேற்பட்ட கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறி கைதிகள், சிறை காவலர்களைத் தாக்கினர்.

இவ்வாறான சூழ்நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சிறைச்சாலை கடந்த 1971ல் மூடப்பட்டது.

இருப்பினும், 1994 இல், வரலாற்றுச் சுற்றுலாவுக்காக சிறைச்சாலை மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது இந்த சிறைச்சாலை ஒரு சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

தற்போதும் இந்த சிறைச்சாலைக்குள் விசித்திரமான சத்தங்கள் கேட்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.


மூடப்பட்ட சிறைச்சாலைக்குள் இருந்து கேட்கும் விசித்திரமான சத்தங்கள் samugammedia அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிலடெல்பியா நகரில் உள்ள பழமையான சிறைச்சாலை மூடப்பட்டுள்ளது.கடந்த 1829 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த சிறைச்சாலையில், கடந்த 1971 ஆம் ஆண்டு வரை நடவடிக்கைகள் தொடர்ந்தன.ஆரம்பத்தில் இந்த சிறைச்சாலை 250 கைதிகளுக்காக மட்டுமே நிர்மாணிக்கப்பட்டது.1900 ஆம் ஆண்டில் காசநோய் போன்ற கொடிய நோய்கள் இந்த சிறைச்சாலையில் பரவியது. இதனால் பல கைதிகள் உயிரிழந்தனர்இந்த நிலையில் கடந்த 1961 ஆம் ஆண்டு சிறையில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறைச்சாலையின் 800க்கும் மேற்பட்ட கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறி கைதிகள், சிறை காவலர்களைத் தாக்கினர்.இவ்வாறான சூழ்நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சிறைச்சாலை கடந்த 1971ல் மூடப்பட்டது.இருப்பினும், 1994 இல், வரலாற்றுச் சுற்றுலாவுக்காக சிறைச்சாலை மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது இந்த சிறைச்சாலை ஒரு சுற்றுலா தலமாக மாறியுள்ளது.தற்போதும் இந்த சிறைச்சாலைக்குள் விசித்திரமான சத்தங்கள் கேட்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement