• Jun 30 2024

ஐக்கிய மக்கள் சக்தியில் சரத் பொன்சேகாவுக்கு கடும் எதிர்ப்பு...!

Sharmi / Jun 28th 2024, 10:53 am
image

Advertisement

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சியில் இருந்து நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழு கட்சி தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சரத் பொன்சேகா கட்சியை விட்டு வெளியேற உள்ளதால் அதற்கு முன்னதாக அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை, தலைமைத்துவத்தை விமர்சித்துவரும் சரத் பொன்சேகாவை நீக்குவதற்கு கட்சிக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மறுபுறம், சரத் பொன்சேகாவுக்கு எதிராக  நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என அக்கட்சியின் சில தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

 சரத் பொன்சேகா விரைவில் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தயாராகி வருவதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தியில் சரத் பொன்சேகாவுக்கு கடும் எதிர்ப்பு. ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சியில் இருந்து நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழு கட்சி தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.சரத் பொன்சேகா கட்சியை விட்டு வெளியேற உள்ளதால் அதற்கு முன்னதாக அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதேவேளை, தலைமைத்துவத்தை விமர்சித்துவரும் சரத் பொன்சேகாவை நீக்குவதற்கு கட்சிக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.மறுபுறம், சரத் பொன்சேகாவுக்கு எதிராக  நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என அக்கட்சியின் சில தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சரத் பொன்சேகா விரைவில் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தயாராகி வருவதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement