• Nov 23 2024

தமிழினத்தின் உயிர் காப்புக்காக புலம்பெயர் தேசத்தில் போராட்டம்..!!

Tamil nila / Feb 4th 2024, 7:59 pm
image

இலங்கை சுதந்திர தினத்தை  முன்னிட்டு  மாபெரும் கண்டன போராட்டம்  நேற்றைய  தினம்  கனடாவில் இடம்பெற்றுள்ளது.


இலங்கை சுதந்திரமடைந்த 76ஆவது சுதந்திர தினத்தினை  முன்னிட்டு தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் ஒடுக்கு முறைக்கு எதிராக இந்த போராட்டம் கனடா தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதாவது தமிழ் மக்களுக்கு எதிரான போர் குற்றத்தை கனேடிய தமிழ் காங்கிரஸ் எப்போதும் ஏற்றுக்கொள்ளாத ஒரு விடயம்.கனடா தமிழ் காங்கிரஸ் இதனை வன்மையாக கண்டிக்கின்றது.



எனவே கனடா  தமிழ் காங்கிரசின் அலுவலகத்திற்கு  முன்னால் குறித்த போராட்டம் இடம் பெற்றுள்ளது.

குறித்த போராட்டத்தில் கனடா  வாழ் தமிழ் மக்கள்,பொது அமைப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.


அத்துடன்  பிரித்தானியாவிலும்  பேரரசின் மன்னாரை நோக்கிய மாபெரும் கண்டன கரிநாள் பேரணியானது  இடம்பெற்றுள்ளது.

இலங்கை சுதந்திரமடைந்த 76ஆவது சுதந்திர தினத்தினை  முன்னிட்டு தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் ஒடுக்கு முறைக்கு எதிராகவும், வட்டுக்கோட்டை தீர்மானத்தை வலியுறுத்தி தன்னாட்சிக்கான உரிமைக்குரல் எனும் தொனிப்பொருளில் கரிநாள் போராட்டம் பிரித்தானிய தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு  குழுவினரின் ஏற்பாட்டில் இன்று காலை 11மணியளவில் பிரித்தானியா இலங்கை தூதுவரகத்திலிருந்து ஆரம்பித்து பாராளுமன்ற முன்றலில் நிறைவுற்றிருந்தது.


தமிழினத்தின் உயிர் காப்புக்காக புலம்பெயர் தேசத்தில் போராட்டம். இலங்கை சுதந்திர தினத்தை  முன்னிட்டு  மாபெரும் கண்டன போராட்டம்  நேற்றைய  தினம்  கனடாவில் இடம்பெற்றுள்ளது.இலங்கை சுதந்திரமடைந்த 76ஆவது சுதந்திர தினத்தினை  முன்னிட்டு தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் ஒடுக்கு முறைக்கு எதிராக இந்த போராட்டம் கனடா தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அதாவது தமிழ் மக்களுக்கு எதிரான போர் குற்றத்தை கனேடிய தமிழ் காங்கிரஸ் எப்போதும் ஏற்றுக்கொள்ளாத ஒரு விடயம்.கனடா தமிழ் காங்கிரஸ் இதனை வன்மையாக கண்டிக்கின்றது.எனவே கனடா  தமிழ் காங்கிரசின் அலுவலகத்திற்கு  முன்னால் குறித்த போராட்டம் இடம் பெற்றுள்ளது.குறித்த போராட்டத்தில் கனடா  வாழ் தமிழ் மக்கள்,பொது அமைப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.அத்துடன்  பிரித்தானியாவிலும்  பேரரசின் மன்னாரை நோக்கிய மாபெரும் கண்டன கரிநாள் பேரணியானது  இடம்பெற்றுள்ளது.இலங்கை சுதந்திரமடைந்த 76ஆவது சுதந்திர தினத்தினை  முன்னிட்டு தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் ஒடுக்கு முறைக்கு எதிராகவும், வட்டுக்கோட்டை தீர்மானத்தை வலியுறுத்தி தன்னாட்சிக்கான உரிமைக்குரல் எனும் தொனிப்பொருளில் கரிநாள் போராட்டம் பிரித்தானிய தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு  குழுவினரின் ஏற்பாட்டில் இன்று காலை 11மணியளவில் பிரித்தானியா இலங்கை தூதுவரகத்திலிருந்து ஆரம்பித்து பாராளுமன்ற முன்றலில் நிறைவுற்றிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement