• Feb 11 2025

வவுனியாவில் மாணவன் மீது தாக்குதல் - பொலிஸாரின் அசமந்தமே காரணம்

Thansita / Feb 10th 2025, 9:43 pm
image

வவுனியா வைரவபுளியங்குளத்தில் போதை ஆசாமிகள் உயர்தர வகுப்பு மாணவன் மீது கண்ணாடித் துண்டுகளால் வெட்டியதில் மாணவன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளார்.

இன்று மாலை வைரவளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்றல் செயற்பாட்டை முடித்து வீதியால் வந்து கொண்டிருந்த உயர்தர வகுப்பு மாணவன் மீது வைரவபுளியங்குளத்தில் வழமையாக கூடி நிற்கும் போதைக்கு அடிமையான இளைஞர்கள் குழு கண்ணாடி துண்டுகளால் வெட்டியுள்ளனர்.

இதன் காரணமாக மாணவன் காயம் அடைந்த நிலையில் அங்கு நின்றவர்களால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை அளிப்பதற்காக மாணவனை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த போதை ஆசாமிகள் தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக இந்த போதைக்கு அடிமையான இளைஞர்கள் குழு அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் கற்றல் செயற்பாட்டை முடித்து வரும் மாணவர்கள் மீது தாக்குதலை நடத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் வவுனியா பொலிஸாரும் அசமந்தமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் மாணவன் மீது தாக்குதல் - பொலிஸாரின் அசமந்தமே காரணம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் போதை ஆசாமிகள் உயர்தர வகுப்பு மாணவன் மீது கண்ணாடித் துண்டுகளால் வெட்டியதில் மாணவன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளார்.இன்று மாலை வைரவளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்றல் செயற்பாட்டை முடித்து வீதியால் வந்து கொண்டிருந்த உயர்தர வகுப்பு மாணவன் மீது வைரவபுளியங்குளத்தில் வழமையாக கூடி நிற்கும் போதைக்கு அடிமையான இளைஞர்கள் குழு கண்ணாடி துண்டுகளால் வெட்டியுள்ளனர்.இதன் காரணமாக மாணவன் காயம் அடைந்த நிலையில் அங்கு நின்றவர்களால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை அளிப்பதற்காக மாணவனை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர்.இந்நிலையில் குறித்த போதை ஆசாமிகள் தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.தொடர்ச்சியாக இந்த போதைக்கு அடிமையான இளைஞர்கள் குழு அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் கற்றல் செயற்பாட்டை முடித்து வரும் மாணவர்கள் மீது தாக்குதலை நடத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.இது தொடர்பில் வவுனியா பொலிஸாரும் அசமந்தமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement