• Jul 16 2025

கல்லூரி வாசலில் பெற்றோல் ஊற்றி தீக்குளித்து மாணவி பலி - இந்தியாவில் பரபரப்பு

shanuja / Jul 16th 2025, 1:56 pm
image

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்து மாணவி ஒருவர் கல்லூரி வாசலில் உயரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்தச் சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ஃபக்கீர் மோகன் கல்லூரியில் இடம்பெற்றுள்ளது. 


கல்லூரியில்   இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், தனது துறைத் தலைவரான பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக  கடந்த ஜூன் 30ஆம் திகதி முறைப்பாடு அளித்திருந்நதார். ஆனால், 12 நாட்கள் ஆகியும் கல்லூரி நிர்வாகமோ,  பொலிஸாரோ  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 


இதனால் மன உளைச்சலுக்கு ஆளான  மாணவி, கடந்த 12 ஆம்  திகதி கல்லூரி நுழைவாயில் முன்பு போராட்டம் நடத்தியதுடன், தன் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.


சுமார் 95 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய மாணவி, புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக மாற்று சிகிச்சை உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக மரணத்துடன் போராடிய  மாணவி, சிகிச்சை பலனின்றி இன்று  உயிரிழந்தார். 


அmதனையடுத்து ஒடிசா மாநில உயர்கல்வித் துறை, மாணவியின் முறைப்பாட்டை  முறையாகக் கையாளத் தவறிய கல்லூரி முதல்வர் திலீப் குமார் கோஷ் மற்றும் பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் சமீர் ஆகியோரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்தது.


இதற்கிடையே, ஒடிசாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நேற்று மாலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல்  தெரிவித்தார். மேலும், இது தொடர்பில்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.


நீதி கிடைக்காத விரக்தியில் கல்லூரி வாசலில் தீக்குளித்த மாணவி  உயிரிழந்த  சம்பவம் ஒடிசா மட்டுமின்றி  இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி வாசலில் பெற்றோல் ஊற்றி தீக்குளித்து மாணவி பலி - இந்தியாவில் பரபரப்பு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்து மாணவி ஒருவர் கல்லூரி வாசலில் உயரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்தச் சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ஃபக்கீர் மோகன் கல்லூரியில் இடம்பெற்றுள்ளது. கல்லூரியில்   இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், தனது துறைத் தலைவரான பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக  கடந்த ஜூன் 30ஆம் திகதி முறைப்பாடு அளித்திருந்நதார். ஆனால், 12 நாட்கள் ஆகியும் கல்லூரி நிர்வாகமோ,  பொலிஸாரோ  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான  மாணவி, கடந்த 12 ஆம்  திகதி கல்லூரி நுழைவாயில் முன்பு போராட்டம் நடத்தியதுடன், தன் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.சுமார் 95 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய மாணவி, புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக மாற்று சிகிச்சை உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக மரணத்துடன் போராடிய  மாணவி, சிகிச்சை பலனின்றி இன்று  உயிரிழந்தார். அmதனையடுத்து ஒடிசா மாநில உயர்கல்வித் துறை, மாணவியின் முறைப்பாட்டை  முறையாகக் கையாளத் தவறிய கல்லூரி முதல்வர் திலீப் குமார் கோஷ் மற்றும் பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் சமீர் ஆகியோரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்தது.இதற்கிடையே, ஒடிசாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நேற்று மாலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல்  தெரிவித்தார். மேலும், இது தொடர்பில்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.நீதி கிடைக்காத விரக்தியில் கல்லூரி வாசலில் தீக்குளித்த மாணவி  உயிரிழந்த  சம்பவம் ஒடிசா மட்டுமின்றி  இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement