• Nov 06 2024

தெல்லிப்பழையில் ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

Tamil nila / Jul 27th 2024, 10:34 pm
image

Advertisement

தெல்லிப்பழையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,

குறித்த பாடசாலை மாணவர்கள் சிலர் ஒரு மாணவனுடைய பேனாவை சுவரில் எறிந்துள்ளனர். பேனா உடைந்த நிலையில் இருந்ததால் சம்பந்தப்பட்ட மாணவர்களை பொறுப்பாசிரியர் ஒருவர் விசாரணை செய்துள்ளார். 

குறித்த ஆண் ஆசிரியர் நடந்தவற்றை கூறுமாறு குறித்த மாணவனை கேட்டதற்கு, அங்கு நடந்த சம்பவத்தை மாணவன் தெரிவித்த நிலையில் அவரை இழுத்துச் சென்று கன்னத்தில் தாக்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மாணவன் பெற்றோரிடம் முறையிட்ட நிலையில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மாணவனுக்கு காது பகுதி வலி காரணமாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது பாதிக்கப்பட்ட மகன் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாண வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.

மகனை தாக்கிய ஆசிரியர் இவ்வாறு பல மாணவர்களை பாடசாலையில் காட்டுமிராண்டித்தனமாக தாக்குவது வழமை.

எனது பிள்ளை கீழே இருந்த பேனாவை எடுத்து சென்ற நிலையில் பேனா அவ்வாறு உன்னிடம் வந்தது என கேட்டு, குறித்த ஆண் ஆசிரியர் சீருடையை பிடித்து இழுத்து அவரின் கன்னப் பகுதியை தாக்கியுள்ளதாக எனது மகன் தெரிவித்தார் என பெறாறோர் தெரிவித்தனர்

ஆகவே தனது பிள்ளைக்கு இடம்பெற்ற சம்பவம் போல் இனி மேலும் இடம்பெறாமல் இருப்பதற்கு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, குறித்த ஆசிரியர் மீது பொலிசார் நடவடிக்கை எடுத்ததாக தான் அறியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தெல்லிப்பழையில் ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி தெல்லிப்பழையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,குறித்த பாடசாலை மாணவர்கள் சிலர் ஒரு மாணவனுடைய பேனாவை சுவரில் எறிந்துள்ளனர். பேனா உடைந்த நிலையில் இருந்ததால் சம்பந்தப்பட்ட மாணவர்களை பொறுப்பாசிரியர் ஒருவர் விசாரணை செய்துள்ளார். குறித்த ஆண் ஆசிரியர் நடந்தவற்றை கூறுமாறு குறித்த மாணவனை கேட்டதற்கு, அங்கு நடந்த சம்பவத்தை மாணவன் தெரிவித்த நிலையில் அவரை இழுத்துச் சென்று கன்னத்தில் தாக்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.குறித்த சம்பவம் தொடர்பில் மாணவன் பெற்றோரிடம் முறையிட்ட நிலையில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மாணவனுக்கு காது பகுதி வலி காரணமாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது பாதிக்கப்பட்ட மகன் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாண வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.மகனை தாக்கிய ஆசிரியர் இவ்வாறு பல மாணவர்களை பாடசாலையில் காட்டுமிராண்டித்தனமாக தாக்குவது வழமை.எனது பிள்ளை கீழே இருந்த பேனாவை எடுத்து சென்ற நிலையில் பேனா அவ்வாறு உன்னிடம் வந்தது என கேட்டு, குறித்த ஆண் ஆசிரியர் சீருடையை பிடித்து இழுத்து அவரின் கன்னப் பகுதியை தாக்கியுள்ளதாக எனது மகன் தெரிவித்தார் என பெறாறோர் தெரிவித்தனர்ஆகவே தனது பிள்ளைக்கு இடம்பெற்ற சம்பவம் போல் இனி மேலும் இடம்பெறாமல் இருப்பதற்கு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, குறித்த ஆசிரியர் மீது பொலிசார் நடவடிக்கை எடுத்ததாக தான் அறியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement