• Oct 02 2025

பாடசாலைக்கு தொலைபேசி கொண்டு சென்ற மாணவன்; கேள்வியெழுப்பிய ஆசிரியர் மீது தாக்குதல்!

shanuja / Oct 1st 2025, 4:32 pm
image

பாடசாலைக்கு தொலைபேசியுடன் சென்ற மாணவனைக் கேள்வியெழுப்பிய ஆசிரியர் ஒருவரைக் குறித்த மாணவன் தாக்கியுள்ளார். 


இந்தச் சம்பவம் மொனராகலையில் உள்ள பிரபலமான பாடசாலை ஒன்றில் இன்று  (01)  சம்பவித்துள்ளது. 



11 ஆம் தரத்தில் கற்கும் மாணவர் ஒருவர் பாடசாலைக்கு கையடக்க தொலைபேசியை பாடசாலைக்குக் கொண்டு சென்றுள்ளார். 


மாணவன் தொலைபேசி வைத்திருந்தததை அவதானித்த ஆசிரியர் அது தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ளார்.



பாடசாலைக்கு ஏன் தொலைபேசி கொண்டு வந்தாய் என்றவாறு கேள்வி எழுப்பியதால் ஆசிரியரை மாணவன் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மாணவர் நடத்திய தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


காயமடைந்த ஆசிரியர் தற்போது மொனராகலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு தொலைபேசி கொண்டு சென்ற மாணவன்; கேள்வியெழுப்பிய ஆசிரியர் மீது தாக்குதல் பாடசாலைக்கு தொலைபேசியுடன் சென்ற மாணவனைக் கேள்வியெழுப்பிய ஆசிரியர் ஒருவரைக் குறித்த மாணவன் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலையில் உள்ள பிரபலமான பாடசாலை ஒன்றில் இன்று  (01)  சம்பவித்துள்ளது. 11 ஆம் தரத்தில் கற்கும் மாணவர் ஒருவர் பாடசாலைக்கு கையடக்க தொலைபேசியை பாடசாலைக்குக் கொண்டு சென்றுள்ளார். மாணவன் தொலைபேசி வைத்திருந்தததை அவதானித்த ஆசிரியர் அது தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ளார்.பாடசாலைக்கு ஏன் தொலைபேசி கொண்டு வந்தாய் என்றவாறு கேள்வி எழுப்பியதால் ஆசிரியரை மாணவன் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.மாணவர் நடத்திய தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஆசிரியர் தற்போது மொனராகலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement