• Dec 28 2024

ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் சிக்கிய மாணவர்கள் - விசாரணையில் வெளிவந்த தகவல்

Chithra / Dec 23rd 2024, 12:55 pm
image

 

57 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்களை வைத்திருந்த நான்கு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

திகன பிரதேசத்தைச் சேர்ந்த விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரினால் தெல்தெனிய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம்  மாணவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு மாணவர்களும் திகன பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்ய முயன்றுள்ளனர்.

மாணவர்களிடம் இருக்கும் நாணயத்தாள்கள் போலியானவை என அறிந்து கொண்ட குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நான்கு மாணவர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் 15 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

நெருங்கிய நபரொருவர் பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்த நாணயத்தாள்களை தங்களுக்கு கொடுத்ததாக மாணவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் அடையாளம் காணப்பட்ட போதிலும் அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் சந்தேக நபரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் சிக்கிய மாணவர்கள் - விசாரணையில் வெளிவந்த தகவல்  57 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்களை வைத்திருந்த நான்கு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.திகன பிரதேசத்தைச் சேர்ந்த விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரினால் தெல்தெனிய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம்  மாணவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.நான்கு மாணவர்களும் திகன பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்ய முயன்றுள்ளனர்.மாணவர்களிடம் இருக்கும் நாணயத்தாள்கள் போலியானவை என அறிந்து கொண்ட குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நான்கு மாணவர்களையும் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் 15 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.நெருங்கிய நபரொருவர் பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்த நாணயத்தாள்களை தங்களுக்கு கொடுத்ததாக மாணவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் அடையாளம் காணப்பட்ட போதிலும் அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் சந்தேக நபரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement