• Nov 14 2024

மத்ரசாவுக்குள் மாணவன் மர்ம மரணம் - மௌலவிக்கு நீதிமன்றம் விடுத்த தீர்ப்பு

Chithra / May 28th 2024, 12:06 pm
image

  

அம்பாறை - சாய்ந்தமருது மத்ரசா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கானது, நேற்றைய தினம்  விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, மௌலவி உட்பட சிசிரிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகிய 4 சந்தேகநபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதேவேளை, குறித்த நால்வரும் கடந்த தவணைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிரிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டின் பொருட்டு கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். 

இதன்பின்னர், இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்களை தொடர்ந்து சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த தவணையின் போது 30, 26, 22 மற்றும் 23 வயது மதிக்கத்தக்க 4 சந்தேக நபர்களை பிணையில் விடுவித்தல் தொடர்பாக சமர்ப்பணம் மற்றும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்கள் நீதவானால் ஆராயப்பட்டுள்ளது. 

மேலும், குறித்த சந்தேக நபர்கள், தலா 10 இலட்சம் ரூபா சரீர பிணை, மாதம் இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுதல், வெளிநாட்டு பயணத்தடை, கடவுச்சீட்டுக்களை நீதிமன்றில் சமர்ப்பித்தல் மற்றும் வழக்கு தவணைகளில் தவறாது முன்னிலையாகுதல் உள்ளிட்ட பிணை நிபந்தனைகள் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மற்றுமொரு சந்தேக நபரான மௌலவிக்கு விளக்கமறியல் நீடிக்கபட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை வழக்கினை ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


மத்ரசாவுக்குள் மாணவன் மர்ம மரணம் - மௌலவிக்கு நீதிமன்றம் விடுத்த தீர்ப்பு   அம்பாறை - சாய்ந்தமருது மத்ரசா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.குறித்த வழக்கானது, நேற்றைய தினம்  விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்போது, மௌலவி உட்பட சிசிரிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகிய 4 சந்தேகநபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.அதேவேளை, குறித்த நால்வரும் கடந்த தவணைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிரிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டின் பொருட்டு கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இதன்பின்னர், இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்களை தொடர்ந்து சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த தவணையின் போது 30, 26, 22 மற்றும் 23 வயது மதிக்கத்தக்க 4 சந்தேக நபர்களை பிணையில் விடுவித்தல் தொடர்பாக சமர்ப்பணம் மற்றும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்கள் நீதவானால் ஆராயப்பட்டுள்ளது. மேலும், குறித்த சந்தேக நபர்கள், தலா 10 இலட்சம் ரூபா சரீர பிணை, மாதம் இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுதல், வெளிநாட்டு பயணத்தடை, கடவுச்சீட்டுக்களை நீதிமன்றில் சமர்ப்பித்தல் மற்றும் வழக்கு தவணைகளில் தவறாது முன்னிலையாகுதல் உள்ளிட்ட பிணை நிபந்தனைகள் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.அதேவேளை, மற்றுமொரு சந்தேக நபரான மௌலவிக்கு விளக்கமறியல் நீடிக்கபட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை வழக்கினை ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement